அன்று காந்தியின் அகிம்சை செருப்புகளை உருவாக்கியவர்கள்! இன்றோ வாழிடம் தேடி அலைகிறார்கள்...

1918ம் ஆண்டுக்கு முன்பே காந்தியால் இவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை.

 Sohini Ghosh

Ahimsa Chappals makers asked to leave the Sabarmati Ashram ஹரிபாய் குபேர்பாய் சாவ்தாவின் வயது 59. தன்னுடைய தாத்தா எப்படி மோர்பியின் தானில் இருந்து சபர்மதி ஆசிரமம் வந்தார் என்பதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அகமதாபாத்தில் 1918ம் ஆண்டு காந்தி, அகிம்சை செருப்புகள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஹரிபாயின் தாத்தா கோவாபாய் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார்.

அந்த காலத்தில் காந்தியால் நாட்டுப்பணிக்கு அழைக்கப்பட்டவர்கள் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நேரடியாக அந்த பணியை ஏற்றுக் கொண்டனர். அப்படியாக சபர்மதியின் கோசாலைக்கு 5 குடும்பங்கள் நகர்ந்தன. அன்றைய காலத்தில் அங்கு நிறைய பசுமாடுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. பசுக்கள் இறக்கும் போது அதன் தோலினை எடுத்து டோனிங் செய்து, செருப்புகளாக பதனிடும் வேலையை அந்த 5 குடும்பங்கள் செய்து வந்தன.

ஹரிபாயின் தந்தை குபேர்பாய் தன்னுடைய தந்தை கோவாபாயுடன் இணைந்து செருப்புகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். காந்தியின் மரணத்தை தொடர்ந்து ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புகளும் ட்ரெஸ்ட்களின் கைகளுக்கு மாற துவங்கியது. குறிப்பாக கோசாலையில் நடைபெறும் அனைத்து பணிகளையும் சபர்மதி ஆசிரமம் கோசாலா ட்ரஸ்ட் மேற்கொண்டது.

1952ம் ஆண்டு அந்த கோசாலையில் ஹரிபாயின் தந்தை குபேர்பாய் மாத சம்பளம் ரூ.25-ஐ பெற்றதற்கான லெட்டர்ஹெட்டை இன்னும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார் ஹரிபாய். தற்போது ஹரிபாய் குஜராத் சுற்றுலாத்துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைஇய மூன்று மகன்களும் ஓட்டுநர்களாகவும் மெக்கானிக்குகளாகவும் பணியாற்றி 14 பேர் கொண்ட குடும்பத்தை பாதுகாத்து வருகிறார்கள்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

கணேஷ்பாய் சோமபாய் ரத்தோட்டின் வயது 56. அவருடைய தாத்தா பேமாபாய் தோக்லாவில் இருந்து சமர்பதி ஆசிரமம் வந்த கதையை அவர் கூறுகிறார். 1969ம் ஆண்டு கோசாலை நிர்வாகம் “எங்களால் உங்களின் பணிக்கு ஏற்ற ஊதியம் வழங்க இயலவில்லை” என்று கூறிய பின்பு பலர் அகிம்சை செருப்புகள் செய்வதை நிறத்திவிட்டனர். ஆனாலும் கணேஷ்பாயின் தந்தை சோமபாய் எப்போதும் போல் செருப்புகளை தயார் செய்து வந்தார். ஆனால் அதனை விற்பனை செய்வது தான் பெரும் கஷ்டமாக அமைந்தது. அப்போது எனக்கு வயது 12. நான் என் அப்பாவின் வேலைக்கு உறுதுணையாக உதவி செய்து கொண்டிருந்தேன்.5ம் வகுப்பு வரை மட்டுமே எனக்கு படிப்பு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க : கேட்டலோனிய மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தூண்டுகோலாய் காந்தியக் கொள்கைகள்…

கணேஷ்பாயின் மகன்களான நரேஷ் மற்றும் ரௌஷிக் தற்போது ராட்டைகள் செய்து வருகிறார்கள். நாங்கள் மட்டுமே தற்போது வரை ராட்டைகள் செய்து வருகிறோம். 5 குடும்பங்களில் நாங்கள் மட்டும் தான் இன்றும் காந்திய அடையாளங்களை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். மக்கள் அனைவரும் மாபெரும் சத்தியங்களை வெறும் வாய் வார்த்தைகளாகவே கூறுகிறார்கள் ஒழிய செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. காந்தி படங்களை மாட்டியிருக்கும் நீதிமன்றங்கள் தான் காந்தியால் அழைத்து வரப்பட்ட எங்களை இங்கிருந்து துரத்துகிறது என்று கூறி வருத்தப்பட்டார்.

அம்ராபாய் ஹிராபாய் ரத்தோட்டின் மருமகள் பார்வதிபென் மட்டுமே இந்த ட்ரெஸ்டியின் மூலம் சம்பளம் பெறும் நிரந்தர ஊழியர். மற்ற நான்கு குடும்பங்களும் ஒப்பந்த ரீதியில் தான் இங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். அந்த ஒப்பந்தமும் 1969ல் முடிவுக்கு வந்தது. அவர்களுக்கு ரூ. 2500 கிராஜூவிட்டியாக 1968ம் ஆண்டே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. பார்வதிபென் தன் மகன்கள் தினேஷ் மற்றும் ஹரிஷூடன் வசித்து வருகின்றார்.

பாபுபாய் தோஷர் 1934ம் ஆண்டு ஆசிரமத்தில் அகிம்சை செருப்புகளை உருவாக்குவதற்காக வந்தார். அவருடைய 5 மகன்களில் நால்வர் ஆசிரமத்திற்கு வெளியே வசித்து வருகிறார்கள். என்னுடைய பேரன் சோனு வீடியோகிராஃபராக பணியாற்றி என்னையும், அவனுடைய தாயையும் பார்த்து வருகிறான் என்கிறார் பாபுபாயின் மனைவி பார்வதிபென். அவருக்கு தற்போது வயது 80 ஆகும்.

மேலும் படிக்க : காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள்

காலாப்பென் (70) பெச்சார்பாய் ரச்சோட்பாயின் மனைவி இவர். தற்போது  தனியாக ஆசிரமத்தில் வசித்து வருகிறார். இவருடைய தேவைகளை இவருக்கு வரும் மாத பென்சன் ரூ.1000-த்தை வைத்து சமாளித்து வருகிறார். இவருடைய 2 மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் ஆசிரமத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். இவருடைய மருமகள்களுடன் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக இவர் வெளியே எங்கும் செல்வதில்லை. 1969ம் ஆண்டு அகிம்சை செருப்புகளை உற்பத்தி செய்ய ஆசிரமம் ஊக்கம்  அளிக்கவில்லை. இவருடைய கணவர் வீட்டில் இருந்த வண்ணம் செருப்புகளை செய்து வெளியில் விற்றுவந்தார். போதிய வருமானம் கிடைக்காத போது அவர் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. 1995ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். தற்போது எங்களை இங்கிருந்து வெளியேறச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வது என்று கேள்வி எழுப்புகிறார் காலாப்பென்.

வழக்கின் பின்னணி

தற்போது சபர்மதி ஆசிரமத்தின் கோசாலை ட்ரஸ்டியாக செயல்பட்டு வருகிறார் ராஜ்கோட்டை சேர்ந்த தேவேந்திரகுமார் தேசாய். அவருடைய நிலத்தை தான் இம்மக்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 1978ம் ஆண்டு அகமதாபாத் நீதிமன்றம் இம்மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. 1998ம் ஆண்டு இம்மக்கள் மீது மீண்டும் வழக்கு போடப்பட்டது. 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவுகள் மார்ச் மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் இந்த ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்களும் வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டது.

அந்த காலத்தில் அகிம்சை செருப்புகள் தயாரிப்பதற்காக இவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வந்த செருப்புகள் தயாரிக்கும் முறை நிறுத்தப்பட்டது. பின்பும் இக்குடும்பத்தினர் இங்கு தான் வசிக்கிறார்கள். இங்கு இறந்து போன உறுப்பினர்களோ தற்போது வாழ்ந்து வருபவர்களோ தாங்கள் இருக்கும் இடத்திற்கான வாடகையை ஒரு போதும் செலுத்தியதே இல்லை. அதனால் தான் அவர்களை இங்கிருந்து வெளியேறும்படி நோட்டிஸ் விடுத்தோம்.

1918ம் ஆண்டுக்கு முன்பே காந்தியால் இவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை. காந்தியின் அகிம்சை செருப்புகள் உருவாக்கும் பணி 1941ம் ஆண்டு தான் துவங்கியது. ஆனால் காந்தியோ ஆசிரமத்தைவிட்டு 1930ம் ஆண்டிலேயே வெளியேறிவிட்டார். அதனால் இந்த குடும்பங்களை காந்தி தான் அழைத்தார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

காந்தியின் கடிதம்

வருங்காலத்தில் இந்த ஆசிரம செயல்பாடுகளை மேற்கொள்ள இருக்கும் ட்ரஸ்ட் நபர்களுக்கு ஆசிரம மைதானத்தில் வாழ்ந்து வரும் ஹரிஜன மக்களுக்கான வீடுகள் குறித்த ஒரு முடிவினை எட்டுதல்.

ஹரிஜன் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகளை உருவாக்கித் தருதல் மற்றும் அதில் ஹரிஜன் அல்லாதோரையும் சேர்க்கும் வழி வகை செய்தல்.

மாட்டு தோலினை பதப்படுத்தி அதை முறையாக செருப்புகள் மற்றும் காலணிகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்க இடம் அமைத்தல்

ஏற்கனவே நம்முடைய ஆசிரம நிலத்தில் சில ஹரிஜன குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக ஒரு காலனியை உருவாக்குவது நம்முடைய சமர்பதி ஆசிரமத்தின் ஒரு கனவு. இவையனைத்தையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை நான் இந்த ட்ரெஸ்டிகளுக்கு முறையாக தெரிவித்துக் கொள்கிறேன் என குஜராத்தியில் காந்தி எழுதிய கடிதம் இன்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் பார்க்க இயலும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close