Advertisment

சபரிமலை விவகாரம் மக்களின் நம்பிக்கை... ஆனால் இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்ட விரோதமா ? - ஓவைசி கேள்வி

பாலின சிறுபான்மையினரின் உணர்வுகள் மதிக்கப்படுகின்றன ஆனால் சமய சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு என கேள்வி...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIMIM Leader Asaduddin Owaisi Opposes Triple Talaq Bill

AIMIM Leader Asaduddin Owaisi Opposes Triple Talaq Bill

AIMIM Leader Asaduddin Owaisi Opposes Triple Talaq Bill : கடந்த நான்கைந்து வருடங்களில், முத்தலாக் நடைமுறை பெரும் பரபரப்பினையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

Advertisment

பரபரப்புகளுக்கு நடுவே முத்தலாக் சட்ட மசோதா நிறைவேற்றம்

இந்நிலையில் நேற்று “மூன்று முறை தலாக் சொல்லி, விவகாரத்து பெறும் இஸ்லாமிய பழக்கமானது தண்டனைக்குரிய குற்றமாகும்” என்று கூறி சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர்.  ஆனாலும் மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 245 உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மையை தொடர்ந்து முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அறிவித்தார்.  லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் சட்டம், ராஜ்யசபைக்கு அனுப்பிவைக்கப்படும்.

AIMIM Leader Asaduddin Owaisi Opposes Triple Talaq Bill

ஹைதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசாவுதீன் ஓவைசி, இந்த முத்தலாக் சட்டத்திற்கு எதிராக தன்னுடைய கருத்துகளை முன்வைத்தார்.

 

மேலும், ஓரினச்சேர்க்கை, திருமணபந்தத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளப்படும் உறவு தவறில்லை போன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்த கேள்வியும் எழுப்பினார்.

மேலும் படிக்க : இந்த வருடத்தில் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் அரசின் மௌனமும்

சபரிமலை விவகாரம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான போது, நீங்கள் உங்கள் மதம் சார்ந்த நம்பிக்காஇ பற்றி பேசினீர்கள். இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை என்பது இல்லையா ? உங்களின் நம்பிக்கை நம்பிக்கை.. ஆனால் என்னுடைய நம்பிக்கை, குற்றச்செயல் ? இது ஒரு கலாச்சாரத்திற்கு எதிரான வன்முறை இல்லையா ? இந்த சட்டம், இந்திய சாசனச் சட்டம் 29ற்கு எதிரானது இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஓவைசி.

சபரிமலைக்குள் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பினை எதிர்த்து கேரளாவில் பாஜகவினரும், சங்கிகளும் போராட்டத்தை உருவாக்கினார்கள்.  உங்களுக்கு அப்படியென்ன நிர்பந்தம், இந்த நடைமுறையை அழிப்பதற்கு ?

உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக தீர்ப்பினை அளிக்கிறது. ஆனால் நீங்கள் முத்தலாக் நடைமுறை குற்றம் என்கிறீர்கள்.  இங்கு பாலின சிறுபான்மையினரின் உரிமைகளுக்கெல்லாம் மதிப்புகள் அளிக்கப்படுகின்றன, சமய சிறுபான்மையினரின் குரல்களுக்கு ஏன் உங்களால் மதிப்புகள் அளிக்க இயலவில்லை? என்று கேள்வி எழுப்பினார். இது இஸ்லாமியர்களுக்கான நீதி கிடையாது என்றும் அவர் கூறினார்.

திருமணம் தாண்டிய தகாது உறவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பத போது அரசாங்கம் அமைதியாக இருந்தது. ஆனால்  முத்தலாக் நடைமுறை மட்டும் குற்றம் - என்று தன்னுடைய எதிர்வாதத்தினை முன்வைத்தார் ஓவைசி.

இந்தியா சாசனப் பிரிவுகளான 14, 15,29 மற்றும் 29 (கருத்து சுதந்திரம், நம்பிக்கை, கடவுள் வழிபாடு, சிறுபான்மையினர்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தும் பிரிவுகள்) என அனைத்திற்கும் எதிராக அமைந்திருக்கிறது இந்த சட்ட மசோதா. ஆகவே நான் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்கிறேன் என்று அவர் நாடாளுமன்றத்தில் நேற்று பேசினார்.

மேலும் படிக்க : முத்தலாக் சட்ட மசோதாவிற்கு எதிரான விவாதம்... அமைச்சர்களின் கருத்துகள்

 

Triple Talaq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment