2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள் ஒரு பார்வை

சில இடங்களில் போராட்டங்கள், வன்முறைகள் வெடிக்க காரணமாகவும் தீர்ப்புகள் அமைந்தன. சில இடங்களில் கொண்டாட்டங்களுடன் சில தீர்ப்புகள் வரவேற்கப்பட்டன

Top 5 Supreme Court’s remarkable orders 2018 : இந்த வருடத்தின் தொடக்கம் முதற்கொண்டே பல முக்கியமான வழக்குகளையும், விசித்திரமான வழக்குகளையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் சந்தித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வருடத்தில் தீபக் மிஸ்ரா மற்றும் ரஞ்சன் கோகாய் தலைமையில் வழங்கப்பட்ட சில முக்கியமான தீர்ப்புகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. சில இடங்களில் போராட்டங்கள், கலவரங்கள், வன்முறைகள் வெடிக்க காரணமாகவும் சில தீர்ப்புகள் அமைந்தன. சில இடங்களில் கொண்டாட்டங்களும் குதுகலமாக சில தீர்ப்புகள் வரவேற்கப்பட்டன. அப்படியாக அமைந்த சில முக்கியமான தீர்ப்புகள் பற்றிய பட்டியல் இதோ.

Top 5 Supreme Court’s remarkable orders 2018

தீபக் மிஸ்ராவின் பணி நிறைவடையும் தருணத்தில் நாட்டிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் கொண்டவை. குறிப்பாக ஆதார் அட்டையின் பயன்பாடு, தகாத உறவுகளில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு மட்டும் தண்டனை அளிக்கும் சட்டம், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா, ஓரினச் சேர்க்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு புறம்பானதா, பதவி உயர்வில் பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டுமா வழக்குகளில் போன்ற தீர்ப்புகளை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

Top 5 Supreme Court’s remarkable orders 2018 – ஓரினச் சேர்க்கைக்கு எதிரான 377 சட்டம் ரத்து (செப்டம்பர் 6, 2018)

இந்திய குற்றவியல் புரிந்துணர்வு சட்டம் 377, இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கருதியதாகும். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்யும் சட்டமும் கூட.

1861ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை தள்ளுபடி செய்தது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா நீதிபதிகள் அடங்கிய அமர்வு.

மேலும் படிக்க : ஓரினச்சேர்க்கை சட்டத்தை நீக்கியதை வரவேற்கும் கொண்டாட்டங்கள்

ஆதார் அட்டை செல்லுபடியாகும் (செப்டம்பர் 26, 2018)

இந்திய அரசியல் சாசனப்படி தனி மனித ரகசியங்களை பாதுகாக்கத் தவறியது ஆதார் என்று பல்வேறு தரப்பில் ஆதார் பயன்படுத்தலுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கினையும் ஐவர் கொண்ட நீதிமன்ற அமர்வு விசாரணை செய்தது. விசாரணை செய்து, ஆதார் அட்டையானது இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கின.

நீதிபதி சந்திரசூட் மற்றும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார். ஆதார் சட்டத்தினை நிதி மசோதாவாக அறிவிக்கக் கோரி மத்திய அரசிற்கு வேண்டுகோளையும் விடுத்தது உச்ச நீதிமன்றம்.

SC/ST பதவி உயர்விற்கு தனிப்பட்ட ஆய்வு தேவையில்லை (செப்டம்பர் 26, 2018)

அரசு பணிகளுக்கான பதவி உயர்வின் போது SC/ST இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை என்ற என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது. பதவி உயர்வினை தனிப்பட்ட ஆய்வு நடத்தி, மாநில அரசு வழங்க வேண்டும் என்று நடைமுறையில் இருந்த தீர்ப்பினை மாற்றி, பணி உயர்விற்காக எந்த விதமான தனிப்பட்ட ஆய்வும் நடத்தப்பட தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தது.

திருமண பந்தம் தாண்டிய உறவு குற்றமில்லை (செப்டம்பர் 27,2018)

திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டு வரும் இணைகளில் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை விதித்த சட்டமான இந்திய தண்டனைச் சட்டம் 497ஐ நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.  இந்த சட்டத்தினை ரத்து செய்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசுட், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய நீதிமன்ற அமர்வு தீர்ப்பினை வழங்கியது.

சபரிமலையில் பெண்கள் வழிபாட்டிற்கு அனுமதி (செப்டம்பர் 28, 2018)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயது பெண்களின் அனுமதி மற்றும் வழிபாட்டிற்கு தடை நிலவி வந்தது. காலம் காலமாக வழக்கதில் இருக்கும் இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம். அனைத்து வயது பெண்களும் தாராளமாக ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஆர். எஃப். நாரிமான், ஏ.எம். கான்வில்கார், டி.ஒய். சந்திரசுத் ஒரே மாதிரியான தீர்ப்பினை வழங்கினர். ஆனால்  இந்து மல்ஹோத்திரா மற்றும், பெண்களின் வழிபாட்டிற்கு மாறாக தீர்ப்பினை வெளியிட்டார்.

மேலும் படிக்க : சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன ?

தீபக் மிஸ்ராவின் பணியில் 2018 மிக முக்கியமான வருடமாகும். ஏன் என்றால், இந்த வருடத்தில் சபின் ஜஹான் – ஹதியா திருமணம் சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.  டெல்லியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயாவின் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.  நீதிமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்பவும், வீடியோ பதிவு செய்யவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அயோத்தி வழக்கில் மட்டும் ஒரு முடிவினை எட்ட இயலாமல் 2019ம் ஆண்டிற்கும் பயணம் செல்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close