Advertisment

இந்திய குற்றவியல் சட்டம் 377 : ஆதரவு தீர்ப்பால் ஸ்தம்பித்த இணையதளம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Section 377 verdict reactions

Section 377 verdict reactions

Section 377 verdict reactions : ஓரினச் சேர்க்கை உறவு குற்றமில்லை என்றும், 377 சட்டத்தை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறது.

Advertisment

Section 377 verdict reactions: 377 சட்டம் ரத்து : மகிழ்ச்சியில் இந்தியா

பல வருடங்களாக சர்ச்சை மற்றும் வழக்குகளை எதிர்கொண்டு வந்த 377 சட்டம் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த இந்த தீர்ப்பில், “ஓரினச் சேர்க்கை உறவு குற்றமில்லை, யாருடன் உறவுகொள்ள வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும், அந்த உறிமை இங்கே அனைவருக்கு உள்ளது. மற்றும் 377 குற்றவியல் சட்டம் ரத்து செய்யப்படுகிறது.” என்று தீர்ப்பளித்தனர்.

இந்திய குற்றவியல் சட்டம் 377 : ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமாகியது

இந்த தீர்ப்புக்கு பிறகு ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமின்றி இந்திய மக்கள் பலரும் தங்களின் ஆதரவு மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Section 377 verdict reactions : 377 சட்டம் ரத்து : ஸ்தம்பித்த இணையதளம்:

September 2018

சென்னையில் நடைபெற்ற கொண்டாட்டம். தீர்ப்பிற்கு பின்னர் அனைவரும் கொண்டாடிய காட்சி.

September 2018

மும்பையில் நடந்த கொண்டாட்டம்.

September 2018

September 2018

பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார். அதில், “வரலாற்றில் முக்கியமான நாள். மிகவும் பெருமையாக இருக்கிறது. மனித நேயத்திற்கும் சம உரிமைக்கும் மிகப்பெரிய வெற்றி இது.”

September 2018

இந்த தீர்ப்பு குறித்து டுவீட் செய்த சஷி தரூர், “இந்த தீர்ப்பு மிகவும் நல்ல தீர்ப்பு. முன்னதாக நான் எடுத்துரைத்த விஷயம் சரி என்று ஞாயப்படுத்தியுள்ளது இந்த தீர்ப்பு.”

September 2018

டெல்லியில் லலித் ஹோட்டலில் நடந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட காட்சி.

September 2018

பெங்களூரூவில் நடைபெற்ற கொண்டாட்டம்.

September 2018

மத்திய அமைச்சர் கனிமொழி தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

September 2018

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், “உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்த நாளில், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் இந்திய மக்களுடனும் இணைந்து இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம்.” என்று பதிவிட்டுள்ளனர்.

Supreme Court Lgbt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment