Aircel-Maxis case : ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் இன்றைய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இருவரையும் கைது செய்ய தடை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.
Aircel-Maxis Case
2006ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் அமையப்பெற்ற அரசின் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ப.சிதம்பரம். மலேசியாவில் இயங்கி வந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும், அதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும் புகார் எழுந்தது.
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board) தடையில்லா சான்றிதழை பெறுவதற்காக மேக்சிஸ் நிறுவனம் கார்த்தியின் நிறுவனங்களுக்கு லஞ்சப் பணத்தினை பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறையினர் மற்றும் சி.பி.ஐ அமைப்பு இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆகஸ்ட் 1 வரை இடைக்காலத்தடை நீட்டிப்பு
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, அதன் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினரும், சி.பி.ஐயும் தாக்கல் செய்த்னர்.
தந்தை மற்றும் மகன் இருவரும் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவினை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் அவர்கள் இருவரையும் கைது செய்ய மே 30 வரை இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையை ஆகஸ்ட் 1 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.