கேரளா வெள்ளம் : வீட்டு மேற்கூரையில் சிக்கிக் கொண்ட குழந்தை மீட்கப்படும் பரபரப்பு காட்சிகள்!

குழந்தையை கண்டதும் அதன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்து குழந்தையை உச்சி முகர்கிறார்.

By: Updated: August 21, 2018, 10:56:19 AM

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் வீட்டு மேற்கூரையில் சிக்கிக் கொண்ட குழந்தையை இந்திய விமானப்படை வீரர் ஒருவர் மீட்கும் பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கேரளா வெள்ளம் :

கேரள மாநிலம் இதுவரை சந்தித்திராத மாபெரும் இழப்பை இந்தாண்டு சந்தித்துள்ளது. வரலாறு காணாத மழை பாதிப்புகளால் கேரள மாநிலம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவை இந்த மாபெரும் துயரத்தில் இருந்து நீக்க அனைத்து நாடுகளும் முன்வந்துள்ளன,

அவர்களுக்கு தேவையான வெள்ள நிவாரண நிதி, உணவு போன்ற பல்வேறு உதவிகளும் அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் உதவியால் அவர்களிடம் சேர்க்கப்பட்டு வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள், மோட்டார் படகுகள் உள்ளிட்டவைகள் மூலமாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் போலீசார், முப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோரை மீட்பு படையினர், தங்களது உயிரையும் பணயம் வைத்து மழை, வெள்ளம், நிலச்சரிவு என பாராமல் மீட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆலப்புழாவில் வீட்டு மேற்கூரையில் சிக்கிக் கொண்ட குழந்தையை இந்திய விமானப்படை வீரர் ஒருவர் மீட்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளனர்.

குழந்தையை மீட்ட விமானப்படை வீரருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். இந்த வீடியோவில் ல் வீட்டு மேற்கூரையில் குழந்தை ஒன்று சிக்கித் தவிக்கிறது. அக்குழந்தையை எவ்வித பாதிப்பும் இன்றி இந்திய விமானப்படை வீரர் ஒருவர் மீட்டு, அதனுடைய தாயிடம் ஒப்படைத்துள்ளார். பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தையை கண்டதும் அதன் தாய்பெருமகிழ்ச்சி அடைந்து குழந்தையை உச்சி முகர்கிறார்.

கேரளா நிவாரண பொருளை கேலி செய்தவர் பணிநீக்கம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Airlifts baby from flooded

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X