கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கும் நேரத்தில் மக்களுக்காகச் சேகரிக்கப்படும் நிவாரண பொருட்களை கேலி செய்த இளைஞருக்குத் தகுந்த பாடம் கற்பித்தது ஓமன் நாடு.
கேரளா நிவாரணம் குறித்து பகிரப்பட்ட முகநூல் பதிவு:
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் புதலத்து என்ற இளைஞர். இவர் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் கனமழையால் கேரள மாநிலத்தை வெள்ளம் தாக்கியுள்ளது. இதனால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்தும், லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிதிஉதவி செய்யுமாறு வீடியோ மூலம் கேரள அரசு கோரிக்கை விடுத்த குறித்த செய்திக்கு
இவர்களுக்காக இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தங்களால் முடிந்த நிவாரண தொகை மற்றும் பொருட்களை சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் முகநூல் மூலம் வெள்ள நிவாரண பொருள் வேண்டிப் பதிவு ஒன்று பகிரப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் பலரும் தங்களால் என்ன முடியும் என்பதையும், எப்படி அனுப்ப வேண்டும் என்ற விளக்கத்தையும் கேட்டு வந்தனர்.
கேரளா நிவாரண பொருட்களை கேலி செய்த ராகுல்:
அந்த நேரத்தில், ராகுல் புதலத்து அப்பதிவில் ‘வெள்ள நிவாரண பொருளாக காண்டம் வேண்டுமா’ என்று கேட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஒருமுறை, கேரள மாநிலத்திற்கு யாரும் உதவக் கூடாது என்றும் அவர் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நிவாரண பொருளை கேலி செய்த ராகுல் புதலத்து
ராகுலின் இந்தப் பதிவு உலகம் முழுவதும் பரவ, இதனை ஓமன் நாட்டில் அவர் பணிபுரியும் நிறுவனம் பார்த்துள்ளது. நிலையான வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் வேதையை புரிந்து கொள்ளாமல், அவர்களின் நிலையைக் கேலி செய்வது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், இதற்காக ராகுலை பணியை விட்டு நீக்குவதாகத் தெரிவித்துள்ளது.
தனது பதிவு குறித்து இந்த நடவடிக்கைக்கு பின்னர் ராகுல் முகநூலில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதுபோல் கேலிக்கையாக பதிவிடும் வேளையில் தான் குடிபோதையில் இருந்ததாகவும், இனி இதுபோன்ற நடந்துக் கொள்ள மாட்டேன் என்றும், இதன் பிறகு சமூக வலைத்தளத்தை உபயோகிக்க மாட்டேன் என்றும் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இவரின் பணி நீக்கத்தை தொடர்ந்து தனது சொந்த ஊரான கேரளாவை கேலி செய்த ராகுல் தற்போது அதே ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கிறார். ஆனால் கேரளா விமான நிலையம் முடங்கியுள்ளதால் ஓமனில் இருந்து எப்படி வந்து இறங்குவது, எவ்வாறு வெள்ளத்தை மீறி ஊருக்குள் நுழைவது என்றெல்லாம் புரியாமல் கடினமான சூழலில் தவிக்கிறார் ராகுல்.
ஓமன் நாடு எடுத்திருக்கும் இந்த முடிவை நெட்டிசன்கள் பலரும் வரவேற்று வருகிறது. இது போன்ற மனிதர்களுக்கு இவ்வாறு தான் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.