'தொண்டையில் உள்ள வைரஸை ஆல்கஹால் அழிக்கும்' - மதுபானக் கடைகளை திறக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ கடிதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
congress MLA Bharat Singh Kundanpur, rajasthan mla, ராஜஸ்தான் எம்எல்ஏ, காங்கிரஸ் எம்எல்ஏ, இந்திய செய்திகள்

congress MLA Bharat Singh Kundanpur, rajasthan mla, ராஜஸ்தான் எம்எல்ஏ, காங்கிரஸ் எம்எல்ஏ, இந்திய செய்திகள்

தொண்டையில் இருக்கும் வைரஸை அழிக்க, மதுபானக் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் எம்எல்ஏ பாரத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அத்யாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கொரோனாவால் 1000 மரணங்கள் : இந்தியாவை விட அதிக சோதனைகள் மேற்கொண்டிருந்த ஜெர்மனி

Advertisment
Advertisements

இந்நிலையில், தொண்டையில் இருக்கும் வைரஸை அழிக்க, மதுபானக் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் எம்எல்ஏ பாரத் சிங் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1, 2020

அதில், 'தொடர் ஊரடங்கால், மாநிலம் முழுவதும் சட்டவிரோத வணிகங்கள் வளர்ந்து வருகிறது. இதனால், மாநில அரசு, கடும் நிதி இழப்பை சந்தித்து வருகிறது. புழக்கத்தில் உள்ள மோசமான மதுபானம் காரணமாக மக்கள், பெரும் சுகாதார ஆபத்தில் இருக்கின்றனர். அரசுக்கும், மக்களுக்கும் உதவுவதற்காக, மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளை மீண்டும் திறப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்,' என கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பாதிப்பு - 60 வயதிற்கும் குறைவானவர்களே அதிகளவில் மரணம் - 2 வாரங்களில் விகிதம் விர்ர்

பின்னர் அவர் கூறுகையில், ஆல்கஹால் கொண்டு கைகழுவுவதால் கொரோனா வைரஸ் அழிவது போல், ஆல்கஹாலை அருந்துவது நிச்சயமாக தொண்டையில் இருக்கும் வைரஸை அழிக்கும். போலி மது அருந்துவதை விட இது மிகவும் சிறந்தது, என்றார். காங்கிரஸ் எம்எல்ஏ.,வின் இந்த கோரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: