தேர்தல் ஆணையம் கூட்டம் : தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாஜக 2014ல் ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சி அடுத்த வருடம் முடிவிற்கு வரும் நிலையில் பொதுத் தேர்தலை எதிர் நோக்கி அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இன்று (27/08/2018) அன்று தலைமைத் தேர்தல் அதிகாரி ஓபி. ராவத் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இக்கூட்டம் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்தக் கூட்டத்தில் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் ஆணையம் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 51 மாநில கட்சிகள் உள்ளன. திமுக சார்பாக டிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பாக தம்பிதுரையும் பங்கேற்கின்றனர்.
நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2019ம் ஆண்டு தேர்தலுக்கான குழுக்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள். அதில் மையக்குழு, தேர்தல் அறிக்கைக் குழு, மற்றும் விளம்பரக்குழுக்களில் இடம் பெற்றிருந்த தலைவர்களின் பெயர் பட்டியல் இடம் பெற்றிருந்தது. அது தொடர்பான செய்தியினைப் படிக்க
எதைப் பற்றி இன்றைய விவாதங்கள் இருக்கும் ?
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பெண்களை அதிக அளவில் வேட்பாளர்களாக நிறுத்துவது மற்றும் தேர்தல் செலவுகளுக்கான உச்ச வரம்பினை நிர்ணயித்தல் ஆகியவற்றைப் பற்றியும் இன்று பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.