UP rallies polls : குற்ற வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு பெயில் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி, தன்னுடைய உத்தரவை பிறப்பித்த பிறகு வியாழக்கிழமை அன்று ஒமிக்ரான் தொற்று குறித்தும் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான சாத்தியமான சூழல் நிலவுவதையும் கருத்தில் கொண்டு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். வலிமையான முடிவுகளை எடுங்கள் மேலும் பேரணிகள், கூட்டங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றை தள்ளிப்போடுவது மற்றும் நிறுத்துவது குறித்து யோசிக்கவும் என்றும் கூறியுள்ளார்.
இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க தொடர் கோரிக்கை: புதிய கமிட்டி அமைத்த தமிழக அரசு
நீதிபதி சேகர் குமார் யாதவ், அலகாபாத் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் நிலைமையைச் சமாளிக்க விதிகளை உருவாக்குமாறு வலியுறுத்தியபோது, அவர் தனது உத்தரவில் பின்வருமாறு தெரிவித்தார். “இன்று மீண்டும், உ.பி.யின் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை லட்சக் கணக்கானவர்களை திரட்டி நடத்தி வருகிறது. இந்த தேர்தல் தொடர்பான கூட்டங்களில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க இயலாது. இது சரியான நேரத்தில் நிறுத்தப்படவில்லை என்றால் கொரோனா இரண்டாம் அலையைக் காட்டிலும் அதிகப்படியான அச்சுறுத்தலாக முடியும்” என்று நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார்.
காசி-விஸ்வநாத் காரிடர் திறப்பு விழாவில் மீறப்பட்ட லட்சுமணன் கோடு
முடிந்தால், பிப்ரவரியில் திட்டமிடப்பட்ட தேர்தல்களை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். உயிருடன் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் நடத்த முடியும் என்றும் நீதிபதி சேகர் குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.
இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் இலவசமாக கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் அறிமுகம் செய்தார். இது பாராட்டத்தக்க செயல். நீதிமன்றம் இதனை பாராட்டுகிறது. அச்சம் தரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரதமர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல்களை நிறுத்துவது குறித்து யோசிக்கவும் வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil