Kashi-Vishwanath Corridor : பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான காசியில் அண்மையில் நடைபெற்ற நகராட்சி சாலை திறப்பு விழாவை, இதற்கு முன்பு அயோத்தியா, பத்ரிநாத், கேதாரிநாத் மற்றும் இதர இந்து மத ஸ்தலங்களில் நடைபெற்ற தொடக்க விழா அல்லது அடிக்கல் நாட்டும் விழாக்களைப் போலவே, இந்து மத பக்தியை வெளிப்படுத்தும் மாபெரும் நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டதாக பிரதமர் மாற்றியிருக்கிறார். இவை எல்லாமே அரசாங்க கருவூலத்தில் இருந்து கணிசமான செலவில் மேற்கொள்ளப்பட்ட விழாக்கள்தான். ஒரு மத சார்பற்ற நாட்டின் உரிமைகள் குறித்து இந்த நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. முன்பு நான் எழுதிய கட்டுரையில் பிரதமரால் லட்சமணன் கோடு மீறப்பட்டது பற்றி நான் பேசியிருந்தேன்.
குறிப்பாக உத்தரபிரதேசத்தில் தமது அரசியல் எதிரிகளை விமர்சிக்க, அரசு செலவில் நடைபெற்ற அரசு விழாக்களை பிரதமர் உபயோகிப்பதை நான் கவனிக்க முடிந்தது. அரசியலில் நமது பெரும்பாலானோரின் நன்மதிப்புகளான ஜனநாயகத்தின் நல்லொழுக்கத்தில் இந்த வித்தியாசம்தான், அடிக்கடி மீறப்படுகிறது. பிரதமரை விடவும் குறைவான நபர் இல்லை என்பதைப்போல வந்ததால்தான் நான் அதிர்ச்சியடைந்தேன். காசியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுடன் ஒப்பிட ஒன்றும் இல்லை. அனைத்தும் இந்துமதத்தின் மகிமைக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இரண்டு நாட்கள் நீடித்த நிகழ்வுகள் ஒட்டு மொத்த அச்சு ஊடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டதுடன் அனைத்து தொலைகாட்சிகளிலும் நேரலை செய்யப்பட்டது. இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயகமாக மேலும் நீடிக்க முடியுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. கடந்த காலத்தில் இஸ்லாமிய ஊடுருவல்காரர்கள் செய்த அனைத்து விதமான தவறுகளுக்காக இப்போதைய பிரதமர் முன்னெடுத்த இறுதி பழிவாங்கலாக இதனை பெரும்பான்மையினர் கொண்டாடினர்.
அயோத்தி நில விற்பனை விவகாரம்: “சோர் பஜார்” என பாஜகவை சாடிய சாம்னாவின் தலையங்கம்
இந்தியா இன்னும் மதசார்பற்ற நாடு என்று நான் இதனை புரிந்து கொண்டேன். எந்த ஒரு மதமும் அற்ற நாடு என்பதுதான் இதன் பொருள். அனைத்து மதங்களையும் சரிசம மாக நடத்த வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கட்டுப்படுத்துகிறது. வெவ்வேறு மதங்களை பின்பற்றுவோரிடையே ஒருவர் இன்னொருவருடன் ஒப்பிடுவதற்கான வித்தியாசம் உருவாவதில்லை அதிகாரப்பதவியில் நான் இருக்கின்றேன். நானே அதிகாரம்படைத்தவர். என் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் முதலில் நான் ஒரு நிர்வாகி அதன் பின்னர்தான் அரசியல்வாதி. மதசார்ப்பற்ற நபராக இருப்பதற்கு யார் ஒருவரும் எனக்கு கற்றுத் தர வேண்டியதில்லை. ஆனால், நான் இயல்பாகவே மதசார்பற்றவன். ஆகையால், அனைத்து மத நம்பிக்கை சார்ந்து பின்பற்றுவோரயும் சமமாக கருதுவதில் சிக்கல் இல்லை. நான் ஆழமான இந்து மத நம்பிக்கை கொண்டவனாகவே தொடர்ந்து இருப்பேன்.
தினமும் நான் பிரார்த்தனைகள் செய்வதற்கு மத்தியில், தினமும் கோயில்களுக்கு செல்கின்றேன். புனிதஸ்தலங்களுக்கு செல்கின்றேன். இப்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாபா தாம் ஸ்தலத்துக்கு பீகாரின் சுல்தான்கன்ஞ்சில்இருந்து செருப்புப் போடாமல் வெறும் காலில் 100 கி.மீக்கும் மேல் நடந்து செல்வது வழக்கம். ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த பயணத்தின் போது கான்வாருடன், புனித கங்கையின் தீர்த்தத்தையும் சிவனுக்கு அளிப்பதற்காக சென்றிருக்கின்றேன். ஆனால், இது எப்போதுமே சொந்த நோக்கம் கொண்டதாகும். அப்படித்தான் இருக்க வேண்டும்.
அப்போது பீகாரின் முதலமைச்சராக இருந்த மாபெரும் சோசலிஸ்ட் தலைவர் கர்பூரி தாக்கூரிடம் கூட யாத்திரை செல்வோருக்காக 100 கி.மீ தூரத்துக்கு அரசு செலவில் தர்மசாலாக்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறை போன்ற போதுமான வசதிகளை உருவாக்கித் தரும்படி நான் கேட்டிருக்கின்றேன். அப்போதய சோசியலிச பீகார் அமைச்சரவையில், இது போன்ற நோக்கங்களுக்காக அரசு பணம் செலவழிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. பெரும் அளவிலான ஒரு பொது நோக்கம் என்பதன் அடிப்படையில் இந்த விஷயத்துக்கு தீர்வு காணப்பட்டது. ஆனால், கர்பூரி தாக்கூரோ அல்லது அவரது அமைச்சரவை சகாக்களோ இது பற்றி பாடலோ அல்லது நடனத்திலோ ஈடுபடும் வகையில் அப்போது ஜன சங்கத்தின் பிரதிநிதிகளாக இல்லை. பெரிய அளவுக்கு அடிக்கல் நாட்டும் விழாவோ அல்லது தொடக்க விழாவோ நடைபெறவில்லை. இன்றைக்கு அது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், என்ன நடைபெற்றிருக்கும் என்று கற்பனை செய்வதற்கே நடுக்கமாக இருக்கிறது.
உயர்மட்ட அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை: ‘பண்டிகைக் கால முன் எச்சரிக்கை தேவை’
மத சுரண்டல், சாதி, மொழி, மதம் அல்லது எந்த ஒரு இதர அடையாளமும் தனிநபருக்காக மற்றும் அரசியல் லாபத்துக்காகத்தான் என்பது உண்மையில் உலகம் முழுவதும் உள்ளது போலவே நம் நாட்டின் தேர்தல் அரசியலிலும் உள்ளதுதான். ஆனால், இது வெளியே தெரியாமல் இருந்தது. இப்போது வெட்கமின்றி வெளிப்படையாக செய்யப்படுவது போல அப்போது வெளிப்படையாக செய்யப்படவில்லை. இப்போதைய பிரதமர் ஆனவர், பாஜகவின் முதலாவது பிரதமர் அல்ல. அவருக்கு முன்னதாக அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அதே நேரத்தில் ஜவஹர்லால் நேருவின் தரநிலைகளோடு நரேந்திரமோடியை ஒப்பிட்டுப் பார்க்கமாட்டேன். இந்த தரநிலைகள் வாஜ்பாயால் நிர்ணயிக்கப்பட்டது என்று தீர்மானிக்க நான் உரிமை படைத்தவனாக இருக்கின்றேன். என்னைப்போலவே அவரையும் நான் நன்கறிவேன். பிறிதொரு நாளில் காசியில் பெரும் காட்சியில் பங்கேற்றது உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை மீறும் வகையில் மோடி மேற்கொண்ட நூற்றுக்கணக்கான செயல்களைப் போல வாஜ்பாய் ஒருபோதும் செய்ததில்லை என்று சொல்வதற்கு எனக்கு தயக்கம் இல்லை. ராஜதர்மம் குப்பைத்தொட்டிக்குகூட அனுப்பப்படலாம்.
நமது ஜனநாயகத்தின் பிரதமர், அதே போல இதர நிர்வாகிகள் உண்மையிலேயே மதம் என்பதை கட்டாயம் தனிப்பட்ட உறவாக கொண்டிருக்க வேண்டும். பிறகு ஏன் மோடி இந்த காட்சியை உருவாக்கினார்? உபி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது என்பதுதான் இதற்கு எளிய தெளிவான பதிலாக இருக்கிறது. யோகி ஆதித்தியா நாத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமானதாக இருக்கின்றன. எனவே அங்கே ஆட்சி அமைக்க நன்கு செயல்படுத்தப்பட்ட வகுப்புவாத பிளவு வழியாக மட்டுமே பெரும்பான்மை பெற முடியும் என்பது பாஜகவின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. உபியின் அரசியல் விளையாட்டைப் போலவே, அதே பார்முலாவில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் முயற்சி செய்வார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, குஜராத்தின் கொடூரமான வன்முறைகளுக்குப்பின்னர் இந்துமதத்தின் அடிப்படைவாதிகளின் அன்பைப்பெற்றவராக மோடி மாறியிருக்கிறார். இந்து உணவுகளை சுரண்டுவதன் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுகின்றனர். இது போதுமானதாக இல்லாத பட்சத்தில், காட்சிக்குள் மியான் முஷாரப் கொண்டு வரப்படுவார். இவ்வாறு உருவாக்கப்பட்ட வகுப்புவாத வைரஸ் கையை விட்டு வெளியேறாது என்று மட்டுமே நம்புகிறேன். எனவே அதன் செயல்திட்டத்துக்கு பதில் சொல்வதக நினைத்து எதிர்கட்சிகள் பாஜக விரிக்கும் வலையில் விழக்கூடாது.வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு, மோசமான ஆட்சி, மோசமான நிர்வாகம், குறிப்பாக கொரோனா தொற்று, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற விஷயங்களில் பாஜகவும் அதன் அரசும் பதில் அளிக்கும் வகையில் பொதுவாக கவனம் செலுத்த வேண்டும். செயல் திட்டத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்தி விட்டால், அதுவே அரசியல் போரில் பாதி வெற்றி பெற்றதற்கு சமமாகும். ஆனால், பிறரின் செயல் திட்டத்துக்கு பதில் சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள், எனவே இந்த போரில் நீங்கள் ஏற்கனவே தோற்று விட்டீர்கள். உபி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஜின்னா, பாகிஸ்தான், அப்பா ஜான், அவுரங்கசீப் உள்ளிட்ட விஷயங்கள் மீது சண்டையிட்டால் அல்லது களத்தில் உள்ள உண்மையான விஷயங்கள் என்னாகும்?
ஆனால், உத்தபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஒரு அரைப்புள்ளி மட்டுமே. முக்கியத்துவம் வாய்ந்தது ஆனால், இறுதியானதல்ல. முக்கியமான போருக்கான யுத்தம் 2024ல் நடக்க உள்ளது. நாம் அறிந்த இந்தியா என்ற எண்ணம் இந்த நாட்டில் நீடிக்குமா இல்லையா என்பதை, இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயகமாக அல்லது இந்து பாகிஸ்தான் ஆக மாறுவதை அப்போது அந்த தேர்தல்தான் தீர்மானிக்கும். பெருநிறுவன, ராணுவவாத, அடிப்படைவாத மற்றும் போலி தேசியவாத நலன்கள் நாட்டைக் கைப்பற்றுமா? அழிவுக்கு கொண்டு செல்லுமா? காசியில் நடந்தது மிகுந்த கவலையளிக்கிறது. ஆனால் மிகவும் கவலைக்குரியது நம் முன்னால் இருக்கும் மிகவும் கடினமான போர்தான்.
இதற்கிடையே மிகவும் முக்கியமான கேள்வி என்னவெனில், புகைப்படக்காரர் இல்லாமல் பிரதமர் நரேந்திரமோடி எங்கும் செல்ல மாட்டாரா? என்பதுதான்.
இந்த கட்டுரை, முதலில் டிசம்பர் 22ம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் The Kashi echo என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் முன்னாள் மத்திய அமைச்சராவார். இப்போது அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக உள்ளார்.
தமிழில் ரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil