ஆட்டிசம் பாதித்த மூன்றரை வயது குழந்தைக்காக ராஜஸ்தானிலிருந்து சரக்கு ரயில் மூலம் வந்த ஒட்டக பால் மும்பையில் டெலிவரி செய்யப்பட்டது.
ஏப்ரல் 4 ஆம் தேதி, செம்பூர் குடியிருப்பாளர் நேஹா சின்ஹா என்பவர் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து ட்வீட் செய்தார். அதில், தனது மூன்றரை வயது ஆண் குழந்தை ஆட்டிசம் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறது. குழந்தைக்கு ஆடு மாடுகளின் பால், அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால் ஒட்டகப்பால் அல்லது அல்லது ஒட்டகப் பால் பவுடர் மட்டுமே உணவாக தரப்படுகிறது.
11, 2020
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த குழந்தைக்கு தேவையான ஒட்டகப்பாலை ராஜஸ்தானில் இருந்து பெற முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தனது குழந்தைக்கு ஒட்டகப்பாலுக்கு ஏற்பாடு செய்து தரும்படி டிவீட் செய்திருந்தார். இது சமூகவலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டது.
ஏழைகளுக்கு உதவுவதை போட்டோ எடுக்க ராஜஸ்தானில் தடை; முதல்வர் எச்சரிக்கை
இந்த ட்வீட் ஒடிசா-கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி அருண் போத்ரா முதல் ராஜஸ்தானில் ரயில்வே அதிகாரிகள் வரை அனைவரையும் ஒருசேர இயக்கியுள்ளது.
சின்ஹாவின் ட்வீட்டைப் பார்த்த போத்ரா, ராஜஸ்தானில் சப்ளையரிடமிருந்து மும்பைக்கு உறைந்த ஒட்டகப் பாலை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த யோசனைகளை கேட்க, வட மேற்கு ரயில்வேயின் தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் தருண் ஜெயின் என்பவரை அணுகினார். ஜெயின், மூத்த வணிக மேலாளர் மகேஷ் சந்த் ஜுவாலியாவுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தார், அதன் பிறகு லூதியானாவிலிருந்து பாந்த்ரா டெர்மினஸ் வரை இயங்கும் பார்சல் சரக்கு ரயில் எண் 00902, அஜ்மீருக்கு அருகிலுள்ள ஃபால்னா நிலையத்தில் திட்டமிடப்படாத நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
"பால் சப்ளையர் ஃபால்னா நிலையத்திற்கு சரக்குகளை அனுப்ப முடியும் என்று கூறினார், ஏனெனில் அது மிக அருகில் இருந்தது. ஆனால் இந்த நிலையம் ஒரு திட்டமிடப்பட்ட நிறுத்தமல்ல, இருப்பினும் ரயில் அங்கேயே நிறுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. பார்சலை சேகரிக்க நிலையத்தில் பொருட்கள் முன்பதிவு கவுண்ட்டரும் திறக்கப்பட்டது. நேற்று இரவு, ராஜஸ்தானில் இருந்து மும்பை கொண்டுவரப்பட்ட அந்த ஒட்டகப் பால், இரவு 8.30 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு கொண்டுச் சேர்க்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த மனிதநேயமிக்க செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”