ஏழைகளுக்கு உதவுவதை போட்டோ எடுக்க ராஜஸ்தானில் தடை; முதல்வர் எச்சரிக்கை

தங்களின் சொந்த பப்ளிசிட்டிக்காக அந்த புகைப்படங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கை

By: April 11, 2020, 3:54:28 PM

Rajasthan Bans taking photos while providing ration and foods to poor : ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கும். ”யாருக்காவது உதவச் சென்றால் நீங்கள் உங்களின் கேமராவை வீட்டில் வைத்து விட்டு செல்லுங்கள்” என்று. இப்போதெல்லாம் நாம் எதைச் செய்தாலும் அதனை உடனடியாக செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து அதில் பாராட்டு பெறுவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். சில  நேரங்களில் இந்த சமூக வலைதள போதை மிகவும் அதிகம் ஆகிவிடுதால் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல், அடுத்தவர்களின் மனம் புண்படும் என்பதையும் மறந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருப்போம்.

மேலும் படிக்க : இந்தியாவுக்கு சேவை செய்ய அழைத்தால் நிச்சயம் வருவேன் – ஆர்.பி.ஐ முன்னாள் ஆளுநர்

மேலும் படிக்க : இந்தியாவுக்கு சேவை அழைத்தால் நிச்சயம் வருவேன் – ஆர்.பி.ஐ முன்னாள் ஆளுநர்

ஊரடங்கு உத்தரவால் ஆயிரக்கணக்கானவர்கள் போதுமான உணவின்றி திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவது நல்ல விசயம் தான். புகைப்படம் எடுத்து பதிவிட்டால் நம்மை பார்த்து பலரும் அதனை பின்பற்றுவார்கள் என்று நினைப்பதும் சரி தான். இருப்பினும் ஏழைகளும், வறுமையில் வாடுபவர்களும் தான் உதவி என்று மற்றவர்களின் கைகளை எதிர்பார்க்கின்றனர். அவர்களுடைய புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி எடுத்து அதை முகநூலில் பதிவது எல்லாம் அபத்தமான செயலாகவே இருக்கிறது. கொஞ்சம் மனிதாபிமானம் என்பது அனைவருக்கும் வேண்டும்.

இதனை நன்றாக உணர்ந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலம், ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவது, ரேசன் பொருட்களை வழங்குவதை புகைப்படம் எடுக்க தடை விதித்துள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாத் கூறுகையில் ”ஏழைகள் மற்றும் வறுமையில் வாடும் நபர்கள் முழுக்க முழுக்க அரசினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ரேஷன் பொருட்கள் மற்றும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்கும் முதல் உரிமை அவர்களுக்கு தான் இருக்கிறது. அப்படி உணவு பொருட்களை வழங்கும் போது புகைப்படம் எடுத்தலை இம்மாநிலம் தடை செய்கிறது. தங்களின் சொந்த பப்ளிசிட்டிக்காக அந்த புகைப்படங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது” என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Rajasthan bans taking photos while providing ration and foods to poor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X