Anjana Harish 21 year old bisexual woman who was sent to de-addiction centers committed suicide
Anjana Harish 21 year old bisexual woman who was sent to de-addiction centers committed suicide : இந்தியாவில் ஓரின சேர்க்கையாளர், ஓர் பாலின ஈர்ப்பு உடையவர்கள் மீது இருக்கும் ”ஸ்டிக்மா” என்பது மிகவும் கவலை அளிக்கும் விதமாகவே அமைந்திருக்கிறது. நாட்டில் இருக்கும் சட்ட திட்டங்களும் தற்போது அவர்களுக்காக செயல்பட துவங்கினாலும், வீட்டில் இருக்கும் உற்ற உறவினர்கள், நண்பர்கள் எல்.ஜி.பி.டி.க்யூ ”கம்யூனிட்டி” தொடர்பான சரியான புரிதல்களும், சமூகம் தரும் புற அழுத்தங்களில் இருந்து அவர்களை வெளியே மீட்டெடுக்கும் வழிமுறைகளும் தெரியாமல் திணறி வருகின்றனர். சமயங்களில் மனநல ஆலோசனை மற்றும் மருத்துவம் பெற்றோர்களுக்கு தான் தேவை என்று தோன்றுகிறது.
Advertisment
கேரளாவின் கண்ணூர் தலச்சேரியில் பிறந்தவர் அஞ்சனா ஹரிஷ். 21 வயதாகும் அவர் மலையாள இலக்கியம் படித்து வருகிறார். தேசிய ஊரடங்கு அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு, மார்ச் 13ம் தேதி தன்னுடைய முக நூல் பக்கத்தில் லைவ் வந்த அஞ்சனா, தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்று அறிவித்தார். மேலும் அவரை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப் படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், ”ஓரினசேர்க்கை” என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அதில் இருந்து விடுபட சிகிச்சை முறைகள் உள்ளது என்றும் யாரோ கூறியதை கேட்டு, அஞ்சனாவை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை சிறை போன்ற ஒன்றில் வைத்து சிகிச்சை அளித்ததாகவும் புகார் அளித்தார். ”எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்ன பேச வேண்டும் என்றும் தெரியவில்லை. இந்த மருந்துகள் என்னை எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறது. என்னால் எதையும் சரியாக பார்க்கவும் முடியவில்லை. ஒரு இயந்திரம் போல் செயல்படுகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு அவர், கோவாவில் அவர் தங்கியிருந்த விடுதியில் இருக்கும் மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று, சமூக செயற்பாட்டாளர்கள், எல்.ஜி.பி.டி.க்யூ கம்யூனிட்டி உறுப்பினர்கள் புகார் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியே சென்ற அஞ்சனா வெகு நேரமாக மீண்டும் ரூமுக்கு திரும்பவில்லை. நாங்கள் வாக்கிங் எங்காவது சென்றிருப்பாள் என்று நினைத்திருந்தோம். ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவள் வரவில்லை. என்னவென்று சென்று பார்த்த போது, மரத்தில் லுங்கியை மாட்டி தூக்கிட்டு கொண்டிருந்தாள் என்று கூறுகிறார் அவருடைய நண்பர். மேலும் அஞ்சனா வெகு நாட்களாக மன அழுத்தத்திலும், தற்கொலை எண்ணங்கள் மேலோங்கியும் அவர் காணப்பட்டார் என்றும் அவர் கூறினார.