Advertisment

கடந்த வருடம் ஜனாதிபதி விருது! இந்த வருடம் பயங்கரவாதிகளுடன் கைது... பரபரப்பை ஏற்படுத்திய தேவிந்தர் சிங்!

காவல்துறையினருடன் எங்கே சென்றனர். அவர்களின் நோக்கம் என்ன என்பதை இனி தான் விசாராணை செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரி விஜய் குமார் அறிவித்தார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anti-Hijack Unit DySP Davinder Singh held with militants

Anti-Hijack Unit DySP Davinder Singh held with militants

 Bashaarat Masood , Adil Akhzer

Advertisment

Anti-Hijack Unit DySP Davinder Singh held with militants : ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் தேவிந்தர் சிங். அவர் சனிக்கிழமை ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டரான சயீத் நவீத் முஷ்தக்குடன் ஜம்முவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செக் போஸ்ட்டில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை.

கடந்த ஆண்டு டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் ஜனாபதி கையால் வீர தீர செயல்களுக்கான விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் 15 முக்கிய உறுப்பினர்களை இந்தியா சார்பில் வரவேற்ற குழுவில் தேவிந்தர் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐ10 காரில் பயணித்த முஷ்தக், சிங், ராஃபி (ஷோபியனில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத குழுவில் இணைந்தவர்) மற்றும் இர்ஃபான் ஷாஃபி (தியரூ ஷோபியன் பகுதியில் வசித்து வருகின்றவர்) ஆகியோர் குலாம் மாவட்டத்தில் உள்ள வான்போஹ் செக் போஸ்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் இன்ஸ்பெக்ட்ரன் ஜெனரல் ஆஃப் போலீஸ் விஜய் குமார் இது குறித்து தெரிவிக்கையில் “ஷோஃபியனில் இருந்து ஐ10 காரில் சில முக்கிய பயங்கரவாதிகள் ஜம்மு ஸ்ரீநகர் நோக்கி பயணித்து வருகின்றனர் என்ற தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் இருக்கும் செக் போஸ்ட்கள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த காரில் இரண்டு பயங்கரவாதிகள் மற்றும் டி.எஸ்.பி, வழக்கறிஞர்கள் ஆகியோர் இருந்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

To read this article in English

காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி கேட்ட போது, எங்களுக்கு தெரியும் ஜம்முவில் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு சிறப்பு ஆப்பரேசனில் பங்கேற்றவர் தேவிந்தர் சிங். இருப்பினும் சனிக்கிழமை அவர் மற்றவர்களுடன் பேசிய விதம் சந்தேகத்திற்கு வழிவகிக்கிறது. அதனால் தான் அவரையும் கைது செய்து பயங்கரவாதியைப் போல் நடத்துகின்றோம். நீதிமன்ற காவலில் தற்போது வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று விஜய் குமார் கூறினார்.

மேலும் தேவிந்தர் சிங்கின் வீட்டினை சோதனை செய்த போது அங்கிருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள், ராணுவம், சி.ஆர்.பி.எஃப், ஐ.பி. மற்றும் ரா அதிகாரிகள் என அனைவரும் இந்த விசாரணையில் ஈடுப்ட உள்ளனர். தேவிந்தர் சிங் காரின் முன்னிருக்கையில் வழக்கறிஞருடன் அமர்ந்திருந்தார். பயங்கரவாதிகள் இருவரும் காரின் பின்னால் அமர்ந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பித்து செல்ல முற்படவில்லை.

ஹிஸ்புல் முஜாஹீதினின் தலைவர் ரியாஸ் நைக்குவிற்கு அடுத்தபடியாக நவீத் முஷ்தாக் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆரம்ப காலத்தில் ஒரு கான்ஸ்டபிளாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. நான்கு துப்பாக்கிகளுடன் வேலையில் இருந்து வெளியேறிய இஅவர் பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் ட்ரெக் ட்ரைவர்களை கொன்றௌள்ளார். இதுவரையில் அவர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷோபியன் மாவட்டத்தின் ஹிஸ்புல் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார். காவல்துறையினருடன் எங்கே சென்றனர். அவர்களின் நோக்கம் என்ன என்பதை இனி தான் விசாராணை செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரி விஜய் குமார் அறிவித்தார்.

மேலும் படிக்க : நாடாளுமன்ற தாக்குதலின்போது அப்சல் குருவுக்கு உதவினாரா தேவிந்தர் சிங்? : திடுக்கிடும் பின்னணி

Jammu And Kashmir Hizbul Mujahideen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment