ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட ஜெகன் மோகன் – குவியும் பாராட்டுகள்!

விமானம் மூலம் கன்னாவரம் வந்த முதல்வர், தன்னுடைய வீடு அமைந்திருக்கும் தடப்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

AP CM Jagan Mohan Reddy's convey gives way for an ambulance

பொதுவாக அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பயணிக்கும் போதும் பல்வேறு சூழலில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை முக்கிய தலைவர்களுக்காக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டும், மக்கள் காத்திருக்க வைக்கப்பட்ட சூழலும் கூட அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்த காரியம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. விமானம் மூலம் கன்னாவரம் வந்த முதல்வர், தன்னுடைய வீடு அமைந்திருக்கும் தடப்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

மேலும் படிக்க : பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லை : அதிரசம் விற்று குடும்ப பொறுப்பை சுமக்கும் சிறுவர்கள்!

அதே சமயத்தில் விஜயவாடாவை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார். இதனைக்கண்ட ஜெகன்மோகன் ரெட்டி, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாதுகாப்பாக வந்து கொண்டிருந்த வழியில் இருந்து விலகி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டனர். அவர் பிறகு பத்திரமாக மருத்துவமனைக்கு சென்றார். ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த துரித நடவடிக்கை மற்றும் உத்தரவு குறித்து பலரும் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ap cm jagan mohan reddys convey gives way for an ambulance

Next Story
விவசாயிகள் தற்கொலை 4 ஆண்டுகளில் 10% குறைவு: கவலை தரும் மாநிலங்கள் எவை?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com