ஆங்கில சேனலான ரிபப்ளிக் டிவி-யின் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி, மற்றும் இருவர் மீது 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு தொடர்பாக ராய்காட் போலீசார், அவரை கைது செய்தனர்.
சென்னைக்கு இன்னும் செம மழை இருக்கு: 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை!
“அர்னாப் கோஸ்வாமி தற்போது ராய்காட் கொண்டு செல்லப்படுகிறார். அவரை விசாரணை அதிகாரி விசாரிப்பார், மேலும் மேற்படி நடவடிக்கை குறித்து அதற்கேற்ப முடிவு செய்யப்படும் ”என்று, கொங்கன் ரேஞ்ச் ஐ.ஜி சஞ்சய் மோஹிட் கூறினார்.
கோஸ்வாமி தன்னை போலீசார் உடல் ரீதியாக தாக்கியதாக கூறினார். அர்னாப் போலீஸ் வேனில் தள்ளப்பட்டதை, ரிபப்ளிக் டிவி-யின் காட்சி காட்டியது. 2018-ம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளரும் அவரது தாயாரும் தற்கொலை செய்துக் கொண்டனர், இது தொடர்பாக ஏற்கெனவே புகார் உள்ளது.
கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்,, தற்கொலை செய்து கொண்ட அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
கோஸ்வாமியின் சேனலிலிருந்து நிலுவையில் உள்ள தொகையை செலுத்தாதது குறித்து அலிபாக் போலீஸ் விசாரணை செய்யவில்லை என்று அதன்யா நாயக் புகார் தெரிவித்ததாக தேஷ்முக் தெரிவித்தார். மேலும் அதனால் தான் தன் தந்தையும் பாட்டியும் தற்கொலை செய்து கொண்டதாக மகள் அதன்யா நாயக் புகார் எழுப்பியதாக தேஷ்முக் தெரிவித்தார்.
சுஷாந்த் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் டிவி சிறப்பு முனைப்புக் காட்டி மகாராஷ்டிரா ஆளும் சிவசேனாவுக்கு எதிராக பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பு காட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிஆர்பி ரேட்டிங்குக்காக முறைகேடாக நடந்த விவகாரம் வேறு அர்னாப் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil News Today Live: தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் …இந்திய வானிலை மையம் அறிவிப்பு!
இந்த சம்பவம் "எமர்ஜென்ஸி நாட்களை" நினைவூட்டுவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். மகாராஷ்டிராவில் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். பத்திரிகைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழி இதுவல்ல” என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
"தொடர்புடைய தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டிருப்பது ஒரு சுதந்திரமான பத்திரிகையாளர் மற்றும் ஒரு சுதந்திர செய்தி அமைப்புக்கு எதிராக, பழிவாங்கும் பயிற்சியின் ஒரு பகுதியாகும்" என ரிபப்ளிக் டிவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"அர்னாப், அவரது குடும்பத்தினர் மற்றும் ரிபப்ளிக் குழு மீது வெளிப்படையான உடல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டு, இன்று காலை உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. இது மும்பை காவல்துறை மற்றும் மகாராஷ்டிரா அரசின் விரக்திக்கு சான்றாகும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காங்கிரசும் அதன் கூட்டணிகளும் மீண்டும் ஜனநாயகத்தை வெட்கப்படுத்தியுள்ளன. ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரசு அதிகாரத்தை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தி, தனிநபர் சுதந்திரம் மீதான தாக்குதல் மற்றும் ஜனநாயகத்தின் 4 வது தூணான ஊடகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது அவசரநிலையை நமக்கு நினைவூட்டுகிறது. இது நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டும்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரு மராத்தி மனிதனுக்கு அநீதி இழைக்கப்படும் ஒவ்வொரு முறையும் கட்சி எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் கூறினார். “அர்னாப் கோஸ்வாமியின் பெயர் மராத்தி கட்டிடக் கலைஞரான அன்வே நாயக்கின் தற்கொலைக் குறிப்பில் உள்ளது. அவரது பெயர் எஃப்.ஐ.ஆரில் இருந்தபோதிலும், முந்தைய பாஜக அரசு அவரை விடுவித்தது. நாயக்கின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்த உள்துறை அமைச்சர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரை நான் வாழ்த்த விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”