Advertisment

News Highlights: அமெரிக்க அதிபர் தேர்தல்; விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

Tamil News : தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்

author-image
WebDesk
New Update
Tamil News Today Live us election results

Tamil News Today Live us election results

Tamil News Today us election results : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 264 இடங்களில் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார். இன்னும் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை. இருப்பினும் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி வருவதாக அவரது பிரச்சாரக்குழு தெரிவிக்கிறது. மறுபக்கம் வாக்கு எண்ணிக்கையில் மோசடிகள் நடந்துள்ளதாக டிரம்ப் பிரச்சாரக்குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்

Advertisment

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசிய நிலையில் ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.2018ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு மற்றும் பணியிட மாற்றம் வழங்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன்படி, ஜாபர் சேட் தீயணைப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை நிர்வாக டிஐஜியாக துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:24 (IST)04 Nov 2020

    மிச்சிகன், விஸ்கான்சின், நெவாடாவில் முன்னிலை வகிக்கும் ஜோ பிடென்

    ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடென் மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் நெவாடா ஆகிய மூன்று மாகாணங்களில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில், மிச்சிகனில், டொனால்ட் டிரம்ப் 49.1% சதவீத வாக்குகளும், ஜோ பிடென் 49.3% வாக்குகளும் பெற்றுள்ளனர். நெவாடாவில், டிரம்பின் 48.6% வாக்குகளைவிட ஜோ பிடென் 49.2% வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். விஸ்கான்சினில், டிரம்பின் 48.9% வாக்குகளுக்கு எதிராக ஜோ பிடென் 49.6 வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

    20:26 (IST)04 Nov 2020

    பெண் காவலரை தாக்கியதாக ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு

    மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று கைது செய்ய முயன்றபோது மகளிர் காவலரை தாக்கியதாக ரிபப்ளிக் டிவி ஆசிரியர் சங்கம் போஸ் பாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    20:15 (IST)04 Nov 2020

    ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம் - தமிழக அரசு அறிவிப்பு

    தீபாவளை பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் அது குறித்து நவம்பர் 11 முதல் நவம்பர் 18 வரை 18004256151 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு பயணிகளுக்கு புகார் எண் அறிவித்துள்ளது.

    20:04 (IST)04 Nov 2020

    தொலைக்காட்சி ரேட்டிங் விவரங்களை மறுஆய்வு செய்ய குழு அமைப்பு - மத்திய அரசு

    தொலைக்காட்சி ரேட்டிங் விவகாரத்தில், தொலைக்காட்சி ரேட்டிங் விவரங்களை மறுஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. டிவி ரேட்டிங் ஏஜென்ஸிகளுக்கான வழிமுறைகள் குறித்து மறுஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    20:01 (IST)04 Nov 2020

    தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அரசு கேபிள் மேலாண் இயக்குனராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளராக சகாயம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக சரவணவேல்ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பத்மஜா ஐஏஎஸ் மகப்பேறு விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த பெரம்பலூர் கோட்டாட்சியராக பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    19:07 (IST)04 Nov 2020

    பள்ளிகள் திறப்பு - 9ம் தேதி கருத்துக்கேட்பு - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில், மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    19:05 (IST)04 Nov 2020

    திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு

    திமுக கூட்டணியில் இருந்து விசிகவை பிரிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

    19:04 (IST)04 Nov 2020

    கொரோனாவால் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறும்

    கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி நடைபெறும் என்று மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

    19:02 (IST)04 Nov 2020

    அமெரிக்க தேர்தலில்; ஜனநாயகக் கட்சியின் முதல் ஓரின சேர்க்கை கருப்பின வேட்பாளர் வெற்றி

    ஜனநாயகக் கட்சியின் ரிச்சி டோரஸ் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஓரின சேர்க்கையாளரான கறுப்பின மனிதர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

    நியூயார்க் நகர கவுன்சில் உறுப்பினரான 32 வயதான டோரஸ், நியூயார்க்கின் 15 வது காங்கிரஸின் மாவட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சியின் பேட்ரிக் டெலிஸை தோற்கடித்து அடுத்த பிரதிநிதியாக ஆனார் என்று நியூயார்க் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    18:07 (IST)04 Nov 2020

    ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 10 மாணவர்கள், 150 ஆசிரியர்களுக்கு கொரோனா

    ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 10 மாணவர்கள், 150 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10ம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    17:24 (IST)04 Nov 2020

    டிரம்ப் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டோம் எனக் கூறுவது சட்டவிரோதம்; எதிர்க்கட்சி வேட்பாளர் கருத்து

    டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டோம் எனக் கூறுவது சட்டவிரோதமானது. ஆபத்தானது. சர்வாதிகாரம். வாக்குகளை எண்ணுங்கள். முடிவுகளை மதியுங்கள் என்று எதிர்க்கட்சி வேட்பாளர் அலெக்சாண்டிரியா ஒகாஸியோ கொர்டெஸ் தெரிவித்துள்ளார்.

    17:19 (IST)04 Nov 2020

    இந்திய-அமெரிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பிரஸ்டன் குல்கர்னி டெக்சாஸில் தோல்வி

    இந்திய-அமெரிக்க முன்னாள் இராஜதந்திரி சீனிவாஸ் ராவ் பிரஸ்டன் குல்கர்னி, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிராய் நெல்ஸிடம் டெக்சாஸின் 22 வது மாவட்டத்தில் தோல்வியைத் தழுவுகிறார். இது அமெரிக்காவில் மிகவும் இனரீதியாக வேறுபட்டது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி, நெஹ்ல்ஸ் 204,537 வாக்குகளுடன் 52 சதவீத வாக்குகளையும் குல்கர்னி 175,738 வாக்குகளுடன் 44 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். இதனால், குல்கர்னியின் தோல்வி உறுதியாகி உள்ளது.

    17:02 (IST)04 Nov 2020

    நவம்பர் 9ம் தேதி பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்

    நவம்பர் 9ம் தேதி, பள்ளிகள் திறப்பு குறித்து  கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.   

    16:58 (IST)04 Nov 2020

    சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.

    16:35 (IST)04 Nov 2020

    தேர்தலில் வெற்றி பெற முடியும் - ஜோ பைடன்

    தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஜோபிடன் தெரிவித்தார். தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பைடன், "நாளை காலைக்குள் முடிவுகள் வெளியாகும் என்றும், ஆதரவாளர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்".  

    16:20 (IST)04 Nov 2020

    மின்னணு முறையில் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்

    இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க, மின்னணு முறையில் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தமிழக மருத்துவ கல்வித்துறை அறிவித்துள்ளது.

    15:29 (IST)04 Nov 2020

    எதிர்க்கட்சி மோசடி செய்கிறது, நாங்கள் ஏற்கெனவே வென்று விட்டோம் - டொனல்ட் ட்ரம்ப்

    எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம். ஜோர்ஜா , டெக்சாஸ் , ப்ளோரிட , வடக்கு கரோலைனா போன்ற பல மாநிலங்களில் மிகப்பெரிய ஆதரவை மக்கள் எங்களுக்கு தந்துள்ளனர். இது மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். அவர்களால் வெல்ல முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதாக அறிவித்தனர். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில், நாங்கள் ஏற்கனவே வென்று விட்டோம்.நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். சட்டத்தை முறையான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, நாங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.

    15:03 (IST)04 Nov 2020

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்று மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    13:59 (IST)04 Nov 2020

    மு. க ஸ்டாலின் அறிக்கை ( 5/5)

    ஒட்டுகிறவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப் போகிறார்கள். பவிசுகளையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஊடகங்களில் உள்ள சிலர் மூலம், தங்களுக்குச் சாமரம் வீசும் கட்டுரைகளையும், காட்சிகளையும் உருவாக்கி வரும் ஆளும் கட்சிக் கும்பலின் அடுத்த கட்ட உத்திதான், கண்ணும் கருத்தும் கூசும் இந்தக் கேவலமான சுவரொட்டிகள்.

    கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற, தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற எள் அளவுக்குக் கூட முயற்சிகள் எடுக்காத ஒரு கொள்ளைக் கூட்டம்; இருட்டறையில் குருட்டுப் பூனையைத் தேடும் எத்தர்களைப் போல, அர்த்தராத்திரியில் அநாமதேய சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலமாக, சுய அரிப்பைச் சொறிந்து கொள்ள விரக்தியின் விளிம்பிலே நிற்பவர்கள் மேற்கொள்ளும் முயற்சி தொடருமானால், தமிழ் மக்கள் மன்றம் வழங்கப் போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

    13:58 (IST)04 Nov 2020

    மு. க ஸ்டாலின் அறிக்கை ( 4/n)

    தன்னை அவதூறு செய்து வைக்கப்பட்ட பேனரை, அனைவரும் இரவிலும் நன்றாகப் படித்துச் செல்ல வசதியாக, விளக்கு ஒன்றைப் பொருத்தி வைத்தார் பேரறிஞர் அண்ணா; ‘இந்த விளக்கு மட்டும் அண்ணாதுரை உபயம்' என்று எழுதி வைத்தார். அந்த வழியில் வந்தவர்கள் நாம். ‘வாழ்க வசவாளர்கள்’ என்றே வாழ்த்துவோம். நமது வெற்றி உறுதி என்பதை உணர்ந்து கொண்டு, நம்மை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்போது நாம் கடைப்பிடித்திட வேண்டியது பொறுமை, பொறுமை! ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பது முதுமொழி. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்பது வள்ளுவம். ஆட்சிக்கு முற்றிலும் எதிரான தமிழ் மக்களின் மனநிலையை மாற்ற என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். எதுவும் பயன் தரவில்லை என்பதால், இப்போது சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள்.

    13:58 (IST)04 Nov 2020

    மு. க ஸ்டாலின் அறிக்கை ( 3/n)

    இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆட்சியில் இருப்போரின் அனுசரணையோடும், ஆதரவோடும்தான் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்தியக் குற்றவியல் சட்டம், புத்தகங்கள் பதிவுச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை தரத்தக்க குற்றங்கள் இவை. பல மாவட்டங்களில் இந்தச் சுவரொட்டிகளைத் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கிழித்து வருகிறார்கள். அச்செயல்களில் அவர்கள் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தரம் தாழ்ந்த சுவரொட்டிகளைக் கண்டு, கழகத் தோழர்கள் கொள்ளும் ஆத்திரமும் ஆவேசமும் எனக்குப் புரியாமல் இல்லை.

    13:57 (IST)04 Nov 2020

    மு. க ஸ்டாலின் அறிக்கை   ( 2/n)

    என்னை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. ஆனால் ஜனநாயகத்தில் விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். என்னை விமர்சிப்பவர்கள், விமர்சனம் செய்வதற்குரிய தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். தகுதி இல்லாத சில நபர்களால், போகிற போக்கில், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்னும் நோக்கில், இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்படுவது, அவற்றில் இடம் பெற்றுள்ள வாசகங்களிலிருந்து தெரிகிறது. இந்த இழிசெயல் தொடர்ந்து நடந்து வருகிறது. அடையாளமற்ற, முகவரியற்ற இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அதனால் ஏற்படும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அதனை உடனடியாகத் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது; காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இருக்கிறது. ஆனால் இதுவரை அத்தகைய சுவரொட்டிகளை ஒட்டுவதைத் தடுக்கவோ, அல்லது அந்த அநாமதேய சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்யவோ எந்த மாவட்ட காவல்துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

    13:57 (IST)04 Nov 2020

    மு. க ஸ்டாலின் அறிக்கை  

    “மக்களை - மாணவர் நலனை - தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க எள்ளளவும் முயற்சிக்காத எத்தர்கள் - சுய அரிப்பைச் சொறிந்துகொள்ள ஒட்டுபவைதான் அநாமதேயச் சுவரொட்டிகள்; மக்கள் வழங்கும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்” என்று மு. க ஸ்டாலின் தெரிவித்தார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "  வெட்கித் தலைகுனிந்து, பெயரோ முகவரியோ வெளியிடத் தெம்பும் திராணியுமற்ற சில திரைமறைவு தில்லுமுல்லுப் பேர்வழிகளால் தமிழ்நாட்டின் தெருக்களில் சில சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. சட்ட நெறிமுறைகளின்படி, அந்தச் சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய அச்சக முகவரியும் இல்லை. ஊழல் கொள்ளைகளில் ஈடுபடுவோர், கொடுப்பவர் - வாங்கிக் கொள்பவர் பெயர்களைப் புதைத்து வைத்திருப்பார்கள் அல்லவா; அதைப்போல! எடப்பாடியைப் புகழும் வாசகங்கள் ஒரு பக்கமும், எதிர்க்கட்சித் தலைவரான என்னை இகழ்ந்து இன்னொரு பக்கமும் கொண்ட வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன".  

     

    13:50 (IST)04 Nov 2020

    சென்னையில் இன்று, "3 நடமாடும் அம்மா உணவகங்கள்" - முதல்வர் துவங்கி வைத்தார்

    "தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க, எளிய மக்களின் பசியை போக்க, மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தின் சேவை நீட்டிப்பாக சென்னையில் இன்று, "3 நடமாடும் அம்மா உணவகங்கள்" துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

    13:29 (IST)04 Nov 2020

    இழுபறி மாகாணங்கள்!

    அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் இழுபறி .மொத்தம் 7 மாகாணங்களில் முடிவுகள் இழுபறியில் உள்ளன.இழுபறியில் உள்ள அரிசோனா, நெவாடா ஆகிய 2 மாகாணங்களில் பைடன் முன்னிலை இழுபறியில் உள்ள ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய 5 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை

    13:03 (IST)04 Nov 2020

    கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை!

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை . பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் சந்திப்பு .வருகிற 16ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

    12:44 (IST)04 Nov 2020

    வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு!

    பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் .வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்  மனுதாரர்  கருத்து. 

    12:40 (IST)04 Nov 2020

    ட்ரம்ப்  ட்வீட்!

    வெற்றியை திருடப் பார்க்கிறார்கள்' தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடப்பதாக ட்ரம்ப்  ட்வீட். 

    12:05 (IST)04 Nov 2020

    அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    கோயில் நிலங்களை கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு நிலங்களை பயன்படுத்துக் கூடாது .அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    11:46 (IST)04 Nov 2020

    கமல்ஹாசன் ஆலோசனை!

    சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் 3ஆம் நாளாக கமல்ஹாசன் ஆலோசனை  சட்டப்பேரவை தேர்தல் , கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசிக்கிறார்.

    11:45 (IST)04 Nov 2020

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

    அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, 50.3 சதவீத வாக்குகளுடன் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன. ஜனநாயக கட்சி 48 புள்ளி 1 சதவீத வாக்குகள் பெற்று, 131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 270 இடங்கள் வென்றால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், இரு கட்சிகளுக்கிடையே போட்டி நீடித்து வருகிறது. 9 மணி நிலவரப்படி 4 கோடியே 18 லட்சம் வாக்குகளை குடியரசு கட்சியும், 3 கோடியே 98 லட்சம் வாக்குகளை ஜனநாயக கட்சியும் பெற்றுள்ளன

    11:43 (IST)04 Nov 2020

    3 ரஃபேல் போர் விமானங்கள் வருகை!

    இந்திய விமானப் படைக்கு வலு சேர்க்கும் வகையில் பிரான்ஸிலிருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்து சேர்கின்றன.இதன் மூலம் இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கும்.

    11:42 (IST)04 Nov 2020

    நடமாடும் அம்மா உணவகம்!

    நடமாடும் அம்மா உணவகம் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார் . வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்து பேசி முதல்வர், நாளடைவில் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்க திட்டம் என தெரிவித்தார். 

    10:59 (IST)04 Nov 2020

    அமெரிக்க அதிபர் தேர்தல்!

    அமெரிக்க அதிபர் தேர்தல் : கலிஃபோர்னியா மாநிலத்தில் வெற்றி பெற்றார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.  டொனால்ட் ட்ரம்ப் - 210 வாக்குகள் பெற்று முன்னிலை ஜோ பைடன் - 227 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றனர். 

    10:12 (IST)04 Nov 2020

    ட்ரம்ப் முன்னிலை!

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இண்டியானா, டென்னசி, கெண்டக்கி, அர்கான்சிஸ், மிசோரி உள்ளிட்ட மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலை

    10:11 (IST)04 Nov 2020

    வருமான வரித்துறையினர் சோதனை!

    ஹெரிட்டேஜ் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை .  மதுரையில் 5, சென்னையில் 4 இடங்களில் ஹெரிட்டேஜ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு. 

    09:45 (IST)04 Nov 2020

    தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!

    சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம் . சென்னையில் ஈக்காட்டுதாங்கல், மெரினா, நந்தனம், மந்தவெளி, வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை. 

    Tamil News Today : திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, மக்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.மிழகத்தில் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய வழக்கில் வீராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கு, நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    நேற்றைய முக்கிய செய்திகள்

    எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைனுக்கு 2 ஆண்டு சிறை.

    விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்தில் உள்ள சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள் ளஅறிக்கையில், விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற ஐந்தாம் தேதி முதல், அடுத்த மாதம் 22 ஆம் தேதி வரை, 48 நாட்களுக்கு பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment