Arthur Road Jail infested with rats Nirav Modi's lawyer tells UK court : வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ்மோடி. இந்தியாவிலிருந்து குடும்பத்துடன் தப்பிச் சென்ற வைர வியாபாரியான நீரோ மோடி தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் குறித்து தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு. அவரை இந்தியாவிற்கு அழைத்து வர செல்ல அனுமதி வேண்டும் என்று இந்தியா சார்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Advertisment
இந்நிலையில் சிறையில் மனித உரிமைகள் மீறல் இருக்கும் பட்சத்தில் நீரவ் மோடியை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. நீரவ்மோடி தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடிய போது அவரை அடைக்க இருக்கும் மும்பை சிறையில் எலிகள் மற்றும் பூச்சி தொல்லைகள் அதிகம் இருப்பதாகவும், மூடப்படாத சாக்கடைகள், அருகில் உள்ள சேரில் இருந்து வரும் சத்தம் இரைச்சல் ஆகியவற்றால் தன்னுடைய தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அதற்கு இந்தியா தரப்பில் இருந்து மும்பையில் இருக்கும் சிறையின் வீடியோவை இங்கிலாந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் நீரவ் மோடிக்கு 3 அடுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றும் எலி பூச்சி தொல்லைகள் எதுவும் இருக்காது என்றும் இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்டது. 20 அடி உயர சுவர் சிறையை சுற்றி இருப்பதால் எந்த விதமான இரைச்சலும் சிறைக்குள் கேட்காது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
மும்பை ஆர்த்தர் சாலை ஜெயிலில் இருக்கும் 12வது பேரக்கில் தான் நீரவ் மோடி சிறையில் அடைக்கப்படுவார் என்றும், அந்த பிரிவானது பொருளாதார மோசடியில் ஈடுபட்டவர்களை அடைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.