Article 370 scrapped : ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இதுக் குறித்து நேற்று மாநிலங்களவையில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.
> ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்படுகின்றன. இனி வரும் காலங்களில் ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக ஒரு யூனியன் பிரதேசம் ஆக மாற்றப்படும். இதில் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டசபை வரையறுக்கப்படவில்லை. ஜம்மு - காஷ்மீர் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்படும். இந்த உரையினை குடியரசு தலைவர் முன்னிலையில் அமித் ஷா வாசித்தார்.
Article 370 scrapped key points you should know
> ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்யப்படுகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா வாசித்தார்.
> காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. அங்கு பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் சிஆர்பிசியின் கீழ் 144 தடை உத்தரவு பிற்பிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
> ஜம்மு காஷ்மீர் முக்கிய தலைவர்களான மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா,ஃபாரூக் அப்துல்லா, சஜாத் லோன் ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டன. அவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் ஆகிறது, சட்டப்பிரிவு 370 ரத்து!
>. அனைத்து தொழில்நுட்ப சேவைகளும் நிறுத்தப்பட்டன. மொபைல், இண்டர்நெட், கேபிள் ஒளிப்பரப்பு என அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
>. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், அமர்நாத் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் விரைவாக வெளியேறவேண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவுருத்தப்பட்டது . சுற்றுலாப்பயணிகள் வெளியேறவேண்டும்’ என்று மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை 98% சுற்றுலா பயணிகள் வெளியேறி விட்டதாக அம்மாநில சுற்றுலாத்துறை இயக்குனர் நிசார் வாணி தெரிவித்தார்.
>. ஸ்ரீநகரில் கல்லூரிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் இருந்த மாணவர்களும் விடுதிகளை காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அறிவிப்பு வரும் வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை புலம் பெயர்ந்து வந்த பல்வேறு தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
Jammu and Kashmir News Live Updates
>. எதிர்கட்சியினர் பாஜக அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரன சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ என்ன நடக்கிறது ஜம்மு - காஷ்மீரில். எந்த தவறும் செய்யாத நிலையில் தலைவர்கள் ஏன் ஒரே இரவில் கைது செய்யப்படுவார்கள்? காஷ்மீரிகள் எங்கள் குடிமக்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள் எங்களுக்கும் உறவினர்கள் என்றால், நிச்சயமாக நாங்கள் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக செயல்படும்போது அவர்களுடன் கைக்கோர்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
> வன்முறைகளை தடுக்க பெரிதளவில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. ஜூலை 25 ம் தேதி, மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளை ஜம்மு காஷ்மீரில் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது.ஆகஸ்ட் 1 ஆம் தேதி, சுமார் 25,000 துணை ராணுவ வீரர்கள் ஜம்மு -காஷ்மீருக்கு மாற்றப்பட்டன என்ற தகவல்களும் வெளியாகின.