Advertisment

விவசாயக்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் - பஞ்சாபிகள் மனதில் இடம் பிடிக்குமா பாஜகவின் தேர்தல் அறிக்கை?

உ.பி.யில் லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் இளைஞர்கள் ஈடுபடும் பட்சத்தில் ரூ. 1 லட்சம் அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
விவசாயக்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் - பஞ்சாபிகள் மனதில் இடம் பிடிக்குமா பாஜகவின் தேர்தல் அறிக்கை?

Assembly Elections 2022 BJP manifesto full details here : பஞ்சாப், உ.பி., கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தகைய சலுகைகளை, ஆட்சிக்கு வந்தால் வழங்குவோம் என்று பாஜக தெரிவித்திருக்கிறது என்பதை நாம் இங்கே காண்போம்.

Advertisment

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது பாஜக. 300 யூனிட் வரை இலவச மின்சாரம், பழங்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் காய்கறி - பழங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் பஞ்சாப் மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது.

ஆடாமலேயே ஜெயித்த தி.மு.க: ஒரே பேரூராட்சியில் 8 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா

உ.பி.யில் லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் இளைஞர்கள் ஈடுபடும் பட்சத்தில் ரூ. 1 லட்சம் அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விவசாயத்திற்காக இலவச மின்சாரம், நெல் மற்றும் கோதுமை விளைச்சலை குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது போன்றவற்றையும் அறிவித்துள்ளது பாஜக. மேலும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ராணி லட்சுமி பாய் யோஜனா திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வழங்குதல், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், தீபாவளி, ஹோலி காலங்களில் வீட்டிற்கு இரண்டு இலவச எல்.பி.ஜி. சிலிண்டர் ஆகியவை வழங்கப்படும் என்றும் அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேர்தல் அறிக்கையை யோகி, உள்த்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

உ.பி. தேர்தல்: யோகிக்கு எதிராக முன்னாள் பாஜக தலைவரின் மனைவியை களம் இறக்கிய சமாஜ்வாடி

கோவா

கோவாவில் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ப்ரமோத் சாவந்த் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டனர். பாஜகவை மக்கள் வெற்றி அடைய செய்தால் கோவாவை “கோ-வொர்க்கிங்” ஸ்பேஸாகவும், ரிமோட் வொர்க்கிங்கிற்கு சரியான இடமாகும் மாநிலத்தை மாற்றுவோம் என்று கூறியுள்ளனர். மேலும் வருடத்திற்கு மூன்று சிலிண்டர்களை இலவசமாக வழங்குவோம் என்றும் அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment