UP elections SP : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியில் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சி, பாஜக முன்னாள் தலைவரின் மனைவியை களம் இறக்கியுள்ளது. இந்த அறிவிப்பு கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020ம் ஆண்டு உயிரிழந்த முன்னாள் பாஜக தலைவர் உபேந்திர தத் சுக்லாவின் மனைவி சபாவதி இந்த தொகுதியில் யோகியை எதிர்த்து போட்டியிடுகிறார். உபேந்திர தத், தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஏ.பி.வி.பியுடன் ஆரம்பித்து 40 ஆண்டுகள் பாஜகவிற்காக உழைத்தவர். கோரக்பூர் தொகுதியில் முக்கிய பிராமண தலைவராக அவர் இருந்து வந்தார். அவர் மரணம் அடையும் போது பாஜக மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு அவர் கோரக்பூர் பிராந்திய பாஜக தலைவராக இருந்தார். உ.பி. முதல்வராக யோகி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவருடைய நாடாளுமன்ற தொகுதி காலியானது. 2018ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுக்லா போட்டியிட்டார். ஆனால் அவர் கோரக்பூர் இடைத்தேர்தலில் எஸ்.பி. – பி.எஸ்.பி. கூட்டணி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
100 தொகுதிகளில் போட்டியிடும் ஓவைஸியின் கட்சி; சவாலை சமாளிக்குமா சமாஜ்வாடி?
குடும்பத்தலைவியாக இத்தனை ஆண்டுகள் இருந்த சபாவதிக்கு இது முதல் தேர்தல். கடந்த மாதம் லக்னோவில் இவர் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து பேசினார்.
”என்னுடைய தந்தையை பாஜக மதிக்கவில்லை. அவர் இக்கட்சிக்காக கொடுத்த பங்களிப்பை அங்கீகரிக்கவில்லை. யோகி கோரக்பூருக்கு பலமுறை இந்த இரண்டு ஆண்டுகளில் வந்திருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட இங்கே வந்து இரங்கல் தெரிவிக்கவில்லை. என் தந்தையின் மரணத்திற்கு பிறகு அவருடைய பெயரை ஒரு சாலைக்கு வைக்கும்படி கூட கோரிக்கை வைத்தோம் ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. பாஜக மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் என்னுடைய தந்தை இறந்து 6 மாதங்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்தார்” என்று சுக்லாவின் மகன் அமித் சுக்லா குறிப்பிட்டுள்ளார்.
கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம் ஆனால் பாஜக மறுத்துவிட்டது. ஆனால் அகிலேஷ் யாதவ் எங்களிடம் வந்து போட்டியில் நிற்க ஒரு வாய்ப்பளிக்கிறோம் என்று கூறி கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் நிற்க வாய்ப்பளித்தார். வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அவர் கூறினார்.
பாஜக தனக்கு டிக்கெட் மறுத்ததையடுத்து, சோகமாக இருந்த கோரக்பூர் நகர்ப்புற பாஜக எம்எல்ஏ ராதா மோகன் தாஸ் அகர்வாலையும் எஸ்பி அணுகியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோரக்பூர் தொகுதியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் தான் சபாவதியை இந்த தொகுதியில் நிறுத்தினால் என்ன என்று யோசனை அளித்துள்ளார். பிராமணராக இருக்கும் அவர் இந்த தொகுதியில் சரியான தேர்வாக இருப்பார். “பிராமண Vs தாக்கூர்”என்ற கருத்தால் இங்கு பயனடைய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தொகுதியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி இஸ்லாமிய வேட்பாளர் க்வாஜா ஷம்சுதீனை யோகிக்கு எதிராக களம் இறக்கியுள்ளது. எஸ்.பி.யின் கூட்டணி கட்சியான அப்னா தளம் (கமரேவாடி) தலைவர் பல்லவி படேலை, உ.பி. துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியாவை எதிர்த்து கௌஷாம்பியில் உள்ள சிரத்துவில் களம் இறக்கியுள்ளார் அகிலேஷ் யாதவ்.
உ.பி. தேர்தல் குறித்த மேலும் பல செய்திகள்
உ.பி.தேர்தல் 2022: பா.ஜ.க.வுக்கு கவலை அளிக்கும் வேலையின்மை, விலைவாசி; காப்பாற்றும் இலவச ரேஷன்
தேர்தலுக்கு முன்பே விரிசலடையும் சமாஜ்வாடி கூட்டணி; குழப்பத்தில் தத்தளிக்கும் கட்சிகள்
தயாராகும் ராமர் கோவில்; ஆனாலும் அயோத்தியில் பா.ஜ.க-வுக்கு சவால்
உ.பி., தேர்தலில் ஆச்சரியமளித்த பாஜக; அகிலேஷூக்கு எதிராக மத்திய அமைச்சர் பாகேல் போட்டி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil