இத்தனை நலத்திட்டங்களைச் செய்தும் 3 மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றது ஏன் ?

வேலை மற்றும் வருமானம் இல்லாத சூழலில் மின்சாரக் கட்டணத்தை கட்டவோ, மாற்று சமையல் சிலிண்டர் வாங்கவோ கிராமப்புற மக்கள் என்ன செய்வார்கள் ?

ஹரீஷ் தாமோதரன்

Assembly elections results 2018 : பாஜக இந்த நாட்டு மக்களுக்கு என்னதான் செய்யவில்லை என்று யோசிக்கும் சூழ்நிலைக்கு வந்துள்ளோம் நாம். கிராமப் புற வளர்ச்சிக்காக சாலைகள் கட்டிக் கொடுத்தது, வீடுகள், கழிவறைகள், மின்சார வசதி, சமையல் எரிவாயு வசதிகள், இணைய சேவைகள் என அனைத்தையும் துரித கதியில் வட இந்திய மாநிலங்களுக்கு வழங்கிக் கொண்டு தான் இருந்தது பாஜக.

Assembly elections results 2018 :  மூன்று மாநிலத் தேர்தல்களிலும் ஏன் படுதோல்வியை சந்தித்தது ?

எத்தனை விதமான வசதிகளை ஏற்படுத்தினாலும், பாஜகவினரால் இம்மூன்ற மாநில மக்களில் வருமானத்தையோ, விவசாயத்தையோ, வாழ்வாதாரத்தையோ மேம்படுத்தவில்லை என்பது தான் உண்மை. பயிர்களுக்கு குறைவான விலை நிர்ணயம் இதில் மிக முக்கியமான ஒன்றாகும்.  மோடி ஆட்சியில் மக்களுக்கு அளிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மிகவும் முக்கியமானவை. அவை சிறப்பு மிக்கவையாகவும் இருந்திருக்கிறது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மேலும் படிக்க : மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளால் பொதுத் தேர்தல் முடிவுகள் பாதிக்குமா ?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும் போது 3.3 மடங்கு அதிகமான வீடுகள் பாஜகவின் ஆட்சியில் கட்டப்பட்டு உள்ளது.

கடந்த மூன்று நிதியாண்டுகளில் மட்டும் சுமார் 1 கோடி வீடுகள் இந்தியா முழுவதும் கட்டப்பட்டுள்ளன. அதில் 27% ம.பி, சத்தீஸ்கர், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கட்டப்பட்டவையாகும்.

மத்தியப் பிரதேசம் – 15.43 லட்சம் வீடுகள்
சத்தீஸ்கர் – 5.99 லட்சம் வீடுகள்
ராஜஸ்தான் – 5.96 லட்சம் வீடுகள்

சாலை வசதிகள்

கிராமப்புற வளர்ச்சியில் மிக முக்கிய பங்கினை வகித்தது சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள். மத்தியப் பிரதேசத்தில் 2000ம் ஆண்டு 60.14% வரை முறையான சாலை வசதிகள் இல்லாத பகுதிகள் இருந்தன. ஆனால் தற்போது 10.89%மாக குறைந்துள்ளது.  ராஜஸ்தானில் 50.04 சதவீதத்தில் இருந்து 8.54%மாக குறைந்துள்ளது. சத்தீஸ்கரில் 60.52%ல் இருந்து 3.98%மாக குறைக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் சமையல் எரிவாயுவினை பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 15.33 கோடியில் இருந்து 24.72 கோடி வரை உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம் : 39.12%ல் தொடங்கி 73.49%மாக சமையல் எரிவாயு உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு வருடங்களில் உயர்ந்துள்ளது.

சத்தீஸ்கர் – 27.63%ல் இருந்து 71.23%

ராஜஸ்தான் – 58.21% முதல் 94.80%

மின் இணைப்பு (சௌபாக்கியா திட்டம்)

21.69 கோடி கிராமப்புற வீடுகளில் 20.87 கோடி வீடுகளில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 25, 2017ம் ஆண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி 4 கோடி மின் இணைப்பு இல்லாத வீடுகளில் சுமார் 3 கோடியே 19 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 100% மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 95.59% வரை குடும்பங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்வச் பாரத் – கழிப்பறைகள்

அக்டோபர் 2, 2014ம் ஆண்டு முதல் 8.98 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மற்றும் ம.பியில் உள்ள இல்லங்களில் 100% கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

பாரத் நெட் (BharatNet)

இந்த திட்டத்தின் மூலம் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் 1,21,859 கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட் பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டது.

மந்திரி ஜன் தன் யோஜனா

இந்த திட்டத்தின் மூலம் 33.38 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. அதில் 19.75 கோடி வங்கிக் கணக்குகள் கிராமப்புறங்களில் உருவாக்கப்பட்டது.  ஆனால் இத்தனை நலத்திட்டங்கள் மேற்கொண்டும் இறுதியில் தோல்வியைத் தழுவியுள்ளது பாஜக.

Assembly elections results 2018 : தோல்விக்கான காரணங்கள்

2014 -15ம் ஆண்டிற்கான மொத்த வணிகமானது 2.75% (உணவுப் பொருட்கள் மற்றும் 0.76% (உணவு அல்லாத இதர விவசாயப் பொருட்கள்) என்ற அளவில் தான் வளர்ந்துள்ளது. ஆனால் அதற்கு முன்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வளர்ச்சி வீதம் 12.26% மற்றும் 11.04% என்று இருந்தது.

வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகள்

விவசாயம் மற்றும் விவசாயம் சாரா இதர தொழிலக்ள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் பெரிய அளவில் பாதிப்பினை சந்தித்தது.  மேலும் வேலை வாய்ப்புகள் குறையத் தொடங்கிய காலங்களில் வேலைகளை தேடிக் கொண்டு வெளியூர்களுக்கு இடம் மாறத் தொடங்கினார்கள். பயிர்களுக்கான விலை அதிகரிப்பதற்கு பதிலாக குறையத் தொடங்கியது. குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின்பு நிலை மிகவும் மோசமானதாக அமைந்தது. வேலை மற்றும் வருமானம் இல்லாத சூழலில் மின்சாரக் கட்டணத்தை கட்டவோ, மாற்று சமையல் சிலிண்டர் வாங்கவோ கிராமப்புற மக்கள் என்ன செய்வார்கள் ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close