Haj 2018 : ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கனோர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.
ஹஜ் மானியம் ரத்து தொடர்பான செய்தியினை படிக்க
இந்த வருடம் ஹஜ் பயணக் கமிட்டியில் நிறைய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதில் மானிய ரத்து, ஆண்களின் துணையின்றி பெண்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் போன்ற மாற்றங்களும் அடங்கும்.
ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு, ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான இடம் ஒதுக்கப்படும்.
2011ம் ஆண்டிலிருந்து இதை இந்திய அரசு பின்பற்றி வருகிறது. இம்முறை சிறப்பு கோட்டாவின் மூலமாக 2000 கூடுதல் இடங்களை ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு.
2018ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் காஷ்மீர் மக்களுக்கான இடங்கள் 7,960ல் இருந்து 10, 062 என தற்போது உயர்ந்திருக்கிறது.
தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் இந்த வருடம் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை 46, 323 ஆகும்.
இதற்காக 609 தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஹஜ் பயணம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு லோக்சபாவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பதில் அளித்துள்ளார்.