Ayodhya land dispute case final verdict updates : இந்தியா மற்றும் உலகம் எங்கும் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் முக்கிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அயோத்தியில் அமைந்திருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்று இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : Ayodhya Verdict : அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை
இந்த செய்திகளை மற்ற மொழிகளில் படிக்க : வங்கம் , ஆங்கிலம், மலையாளம்
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
சன்னி வக்பு வாரியத்துக்கு எதிராக சியா வக்பு வாரியம் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நிலத்தை நிர்வகிக்க கோரி நிர்மோகி அகாரா தொடுத்த வழக்கில் உண்மைப்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
அயோத்தி தீர்ப்பு முழுமையாக இந்த இணைபில் ஆங்கிலத்தில் படிக்கலாம்:
பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. அதற்கு முன்பே அங்கு ஒரு கட்டிடம் இருந்திருக்கிறது என்ற தொல்லியல் துறையின் ஆராய்ச்சி முடிவுகளை மறுக்க இயலாது.
சன்னி வக்பு வாரியம் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலமாக வழங்கப்படும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோவில் கட்டலாம். அதற்காக கூடிய விரைவில் அறக்கட்டளையை உருவாக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வெளியிட்டார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.
பிரதமர் மோடி உரை:
My address to the nation. https://t.co/xeMEuOyun0
— Narendra Modi (@narendramodi) November 9, 2019
Live Blog
Ramjanmabhoomi-Babri Masjid title dispute : வழக்கின் தீர்ப்பு குறித்த அனைத்து தகவல்களும் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு
அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அதில், "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. உச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது. அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் வேற்றுமை ஒற்றுமைக்கு இந்த நாள் சிறந்த உதாரணம். இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது...." என்று பேசி வருகிறார்.
அயோத்தி தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: இன்றைய நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும். தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நான் நவம்பர் 24 அன்று அயோத்திக்குச் செல்வேன். இது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த நாளில் பால் தாக்கரே, அசோக் சிங்கால் ஆகியோரை நான் நினைவுகூர்கிறேன்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சனிக்கிழமையன்று தீர்ப்பில் உண்மையும் நீதியும் நிலவுவதாகவும், தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கக்கூடாது என்று கூறினார்.
டெல்லி ஜாண்டேவாலாவில் உள்ள சங்கத்தின் மத்திய அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பகவத், “உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த வழக்கு பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. அது சரியான முடிவை எட்டியுள்ளது. இதை ஒரு வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கக்கூடாது. சமுதாயத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான அனைவரின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.” என்றார்.
அயோத்தி ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வரவேற்றார். மும்பையில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஊடகங்களில் உரையாற்றிய அவர், தீர்ப்பை யாருடைய வெற்றி அல்லது தோல்வி என்று பகுப்பாய்வு செய்யக்கூடாது என்றார். மாறாக, அது அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் ஒன்றிணைத்து பலப்படுத்தும். இது புதிய இந்தியாவிற்கான பெரிய தேசத்தைக் கட்டியெழுப்ப மக்களை அழைத்துச் செல்கிறது. மும்பை மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டமைத்த மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றார்.
அயோத்தி நில தகராறு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும், நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார். நாட்டில் அனைவருக்கும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பை வளர்ப்பதற்கான நேரம் இது என்று குறிப்பிட்டார். அயோத்தி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை மதிக்கும்போது, நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும். இது இந்தியர்கள் அனைவரிடமும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்புக்கான நேரம்” என்று அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு சிக்கலான பிரச்சினைக்கு நீதித் தீர்மானத்தை வழங்கியிருப்பதால், தீர்ப்பின் சில பகுதிகள் கேள்விக்குரியவை. சிபிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1992 டிசம்பரில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்தை மீறும் செயல் என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் .
“1991 ஆம் ஆண்டு மத வழிபாட்டு இடங்கள் சட்டத்தையும் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. இந்தச் சட்டத்தைக் கடைபிடிப்பது மற்றும் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாவிட்டால், நீதித்துறை தீர்ப்பின் மூலம் சர்ச்சையைத் தீர்க்க எப்போதும் முயன்று வருவதாகவும், வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலூக்கமான செயல்களும் இருக்கக்கூடாது என்றும் அது முறையிட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தி அடையாத ஏ.ஐ.எம்.ஐ,எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால் தவறற்றது அல்ல. உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளபடி 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும். இந்த தீர்ப்பில் நாங்கள் திருப்தியடையவில்லை. உச்ச நீதிமன்றம் உண்மையில் உச்சமானது. ஆனால், தவறில்லாதது அல்ல. எங்களுக்கு அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் நன்கொடையாக தேவையில்லை. இதை நாங்கள் நிராகரிக்க வேண்டும் .5 ஏக்கர் நில சலுகை அளித்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம்” என்று அவர் கூறினார்.
கர்த்தார்பூர் நடைபாதை திறக்கப்பட்ட அதே நாளில் அயோத்தி தீர்ப்பு வந்துள்ள நிலையில், தீர்ப்பு வெளியான சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி ஆட்சேபித்துள்ளார். இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் காட்டப்பட்ட பதற்றம் உணர்வு குறித்து அவர் மிகவும் வருத்தப்படுவதாக கூறினார்.
அயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில முதல்வர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கர்தார்பூர் கோரிடர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசியுள்ளார். அதில் இந்த தீர்ப்பினை யாருக்கும் வெற்றியாகவோ தோல்வியாகவோ கருதக்கூடாது. ராம பக்தியோ ரஹீமின் பக்தியோ இது தேசத்தின் பக்தியை வலிமைப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். நம் நாட்டு குடிமக்கள் அனைவரும் ஒற்றுமையாக, அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் கேண்டுகோள் விடுத்தார்.
1045 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் நகல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள
1857ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்துக்கள் இந்த கட்டிடத்துக்குள் சென்று வழிபட தடை ஏதும் இருந்திருக்கவில்லை. அலகாபாத் உயர்நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து தர வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பு தவறானது என்றும் உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பினை வழங்கி வருகிறது.
மத நம்பிக்கையானது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. அதே போன்று அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.
தொல்லியல் துறையின் ஆராய்ச்சி முடிவுகளையும் ஒதுக்கிவிட இயலாது. பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. அதற்கு முன்பே அந்த இடத்தில் இஸ்லாமிய முறையில் கட்டப்படாத கட்டிடம் ஒன்று இருந்திருக்கிறது என்றும் ரஞ்சன் கோகாய் அறிவித்து வருகிறார்.
ASI report leads to conclusion that Babri mosque was not constructed on vacant land @IndianExpress
— Ananthakrishnan G (@axidentaljourno) November 9, 2019
சன்னி வக்பு வாரியத்துக்கு எதிராக சியா வக்பு வாரியம் அமைப்பு தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து அறிவித்தார் ரஞ்சன் கோகாய். இந்த தீர்ப்பினை வாசிக்க 30 நிமிடங்களுக்கும் மேலாகும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு.
SC Dismisses SLP by Shia Central Warburg Board @IndianExpress
— Ananthakrishnan G (@axidentaljourno) November 9, 2019
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தற்போது தன்னுடைய இல்லத்தில் இருந்து வெளியேறி உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளார். கோர்ட் எண் 1-ன் கதவுகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் வாசலுக்கு வெளியே ஏராளமானோர் தீர்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தற்போது தன்னுடைய இல்லத்தில் இருந்து வெளியேறி உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளார். கோர்ட் எண் 1-ன் கதவுகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் வாசலுக்கு வெளியே ஏராளமானோர் தீர்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
காங்கிரஸ் தேசிய செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், பரஸ்பர அன்பு ஆகியவற்றை பேணி பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு’ என கூறியிருக்கிறார்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்க உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்த மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. அதே போல, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆகிய மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
கோவா, உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூட்டம் கூடாமல் இருக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாவதை ஒட்டி அனைவரின் எண்ண ஓட்டமும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தே உள்ளது. எங்கள் செய்தியாளர் அனந்தகிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தில் எடுத்த புகைப்படங்கள்
It’s all set for the historic #Ayodhya verdict. @IndianExpress pic.twitter.com/AFXznjU3P6
— Ananthakrishnan G (@axidentaljourno) November 9, 2019
அயோத்தி தீர்ப்பு இன்று வெளி வர இருக்கின்ற நிலையில் சாதி மத பூசலுக்கு இடம் தராமல் தமிழகத்தை என்றும் அமைதிப் பூங்காவாக வைத்திருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அனைத்து மதத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர்.
உத்திரப்பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், உள்ளிட்ட முக்கிய இடங்கள் திங்கள் கிழமை வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் நவம்பர் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். அயோத்தியின் அனுமன் கர்ஹி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அமைந்திருக்கும் ரஞ்சன் கோகாயின் இல்லத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அயோத்தி வழக்கு வெளியாக உள்ள நிலையில் நாளை காலை 6 மணி வரை இணைய சேவை ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் முடக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இணைய சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ராஸ்தான் மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஸ்கேனர் கருவிகள் மூலமாக ஒவ்வொரு பயணியின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே ரயில் நிலையத்துக்குள் அனுப்பப்படுகின்றனர். நேற்றிரவு முதலே ரயில்வே படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிவர இருக்கும் தீர்ப்பு யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது. இந்த தீர்ப்பு இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமையை பலப்படுத்தும் ஒன்றாக அமைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ட்வீட் செய்திருந்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று தொடரப்பட்ட வழக்கினை 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை செய்தது அரசியல் சாசன அமர்வு. சமரசக் குழுவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இந்த 40 நாட்கள் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்றது.
இந்த வழக்கின் தீர்ப்பினால் எதுவும் நடக்கலாம் என்பதால் இந்தியா முழுவதும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சி அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் என முக்கிய இடங்கள் அனைத்திற்கும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights