Ayodhya mediation panel submits report : 1992ம் ஆண்டு, உத்திரப்பிரதேசத்தில் இருந்த புகழ்பெற்ற, பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. வலதுசாரி அமைப்புகள் மற்றும் கட்சியினர் இந்த செயலை முன்னின்று நடத்தினர். இதன் பின்பு இந்தியாவின் பல்வேறு பக்கங்களில் மதக்கலவரங்கள் உருவாகின. இது தொடரபான வழக்குகள் பல்வேறு இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 30ம் தேதி, 2010ம் ஆண்டு சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, மற்றும் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு வழக்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை கடுமையாக எதிர்த்து 14 மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
Ayodhya mediation panel submits report : 3 பேர் கொண்ட சமரசக் குழு
சமரச தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கிற்கான அறிக்கையை சமர்பிக்க மார்ச் 8ம் தேதி சமரச குழு அமைத்தது. இந்த குழுவில் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஜூலை 18ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அஷோக் பூசன் மற்றும் அப்துல் நசீர் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் முழு அறிக்கையை சமர்பிக்க கோரியது.
மத்தியஸ்தர்கள் அறிக்கை
01-08-2019 : முழு அறிக்கையை சமர்பித்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் உரையாடல் நடத்தி அந்த விவரங்களை அறிக்கையாக சமர்பித்தது. ஆனாலும் அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை என மத்தியஸ்தர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்தியஸ்தர்கள் மூலமாக இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இனி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதியில் இருந்து தினசரி அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கின் இறுதி கட்ட விசாரணைகள் நடைபெறும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
மேலும் படிக்க : அயோத்தி தீர்ப்பு : மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்!