2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்ட நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வொரு பேச்சும் முந்தைய பேச்சை விட அதிகமாக உள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது, தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களை கைப்பற்றி, ஆம் ஆத்மி உட்பட எதிர்க்கட்சிகளை தோற்கடித்து, ஆம் ஆத்மி கட்சியின் எண்ணிக்கையை நான்கில் இருந்து ஒன்றுக்குக் குறைத்தது. அடுத்த ஆண்டில், டெல்லி முதல்வர், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஜோடி சேர்ந்து, ஒரு அரசியல் "மாற்றத்தின்" ஒரு பகுதியாக பிரதமருக்கு எதிரான தனது ஆடுகளத்தை அமைத்தார்.
இதையும் படியுங்கள்: சாவர்க்கர் மீதான விமர்சனத்தை தவிர்க்க ஒப்புதல்; சிவசேனா – காங். இடையே சமாதானம் செய்த சரத் பவார்
இருப்பினும், தனித்தனி ஊழல் குற்றச்சாட்டில் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டது, ஆம் ஆத்மி கட்சியை ஒரு முழு நெருக்கடியின் நடுவே நிறுத்தியது, இது முன்னர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகழுவிய மோடி "எதிரி” என்று நிச்சயமற்ற வகையில் குறிக்கப்படும் அரசியலின் முத்திரையை மீண்டும் தழுவ வேண்டிய கட்டாயத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவாலை தள்ளியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமரை பலமுறை தாக்கி பேசியுள்ளார். வியாழக்கிழமை, டெல்லி முழுவதும் “மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சாவோ (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்)” என்ற போஸ்டர்கள் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பிரதமரை அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மறுநாள், மோடியைப் போல "பாதுகாப்பற்ற, ஊழல் மற்றும் படிக்காத" பிரதமரை நாடு இன்னும் பார்க்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். செவ்வாயன்று, அரவிந்த் கெஜ்ரிவால், தொழிலதிபர் கௌதம் அதானியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக மோடியைத் தாக்கி, “பிரதமருக்குக் குறைவான கல்வியறிவு மற்றும் விஷயங்கள் சரியாகப் புரியவில்லை. இது கவலையளிக்கிறது," என்று கூறினார்.
லோக்சபாவில் தோல்வியடைந்த ஒரு வருடத்திற்குள் 2020 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை அமைத்த டெல்லியில் இந்த வியூகம் வேலை செய்ததாகத் தோன்றிய, பிரதமரை நேரடியாகத் தாக்குவதில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால், ஆம் ஆத்மியால் தேசிய தலைநகரின் எல்லைக்கு அப்பால் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை என்பது காரணமாக இருக்கலாம்.
“அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமரை விரும்பவில்லை என்பது வெளிப்படையானது. பிரதமர் ஒரு 'கோழை மற்றும் ஒரு மனநோயாளி' என்று 2015 இல் அவர் செய்த ட்வீட் அதன் பிரதிபலிப்பாகும். ஆனால், பா.ஜ.க.,வால் ஏமாற்றமடைந்த வாக்காளர் தளத்தின் ஒரு பகுதியை எங்கள் வசமாக்குவதே முக்கிய திட்டம், பா.ஜ.க மீது அதிருப்தி இருந்திருக்கலாம், ஆனால் பிரதமர் மீதான தாக்குதல்களை சுவைக்க முடியாது என்று நாங்கள் உணர்ந்தோம்,” என்று ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் கூறினார்.
ஆம் ஆத்மியின் மத பக்தி மற்றும் சிவில் உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட ஒருமுகப்படுத்தும் பிரச்சினைகளில் நிலைப்பாட்டை எடுக்க உறுதியான மறுப்பு ஆகியவை அதன் தலைவர்களால் "உண்மையான அரசியல்" என்று நியாயப்படுத்தப்பட்டன.
பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதைக் கண்டிப்பதை ஆம் ஆத்மி கட்சி தவிர்க்கும் நிலைப்பாடு குஜராத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அந்த உத்தி பெரிய வெற்றியைத் தரவில்லை, பாரம்பரியமாக காங்கிரஸுடன் நின்ற பகுதிகள் மற்றும் சமூகங்களில் மட்டுமே அக்கட்சிக்கு லாபம் கிடைத்தது. சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்ட பிறகு கட்சி பாதியில் அவரை கைவிட்ட நிலைபபாடும், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தோல்வியடைந்தது.
டெல்லியில், ஆம் ஆத்மி ஆரம்பத்தில் பெரிய வெற்றிகளைப் பெற்றப்போதும், பா.ஜ.க தொடர்ந்து கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 2020 இல் 38.51 சதவீதம், 2015 இல் 32.3 சதவீதம், 2013 இல் 33 சதவீதம், 2008 இல் 36.34 சதவீதம். "ஊழலுக்கு எதிரான இந்தியா" இயக்கத்திற்குப் பிறகு நடுத்தர வர்க்கத்தினர் அதை நோக்கி ஈர்க்கப்பட்டனர். ஏழை சமூகங்கள் காங்கிரஸிலிருந்து விலகியதால், ஆம் ஆத்மி தனது ஆதிக்கத்தை முத்திரை பதித்தது.
மேலும், ஆம் ஆத்மி கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற பஞ்சாபின் நிலைமை மற்ற மாநிலங்களில் இல்லை. ”இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பைத் தவிர வேறு எங்கும் வெற்றிபெற வாய்ப்பில்லை. தேசிய அளவில் பா.ஜ.க மற்றும் பிரதமருக்கு எதிராக ஆக்ரோஷத்தை காட்டுவதுதான் பஞ்சாபில் எங்களின் வாய்ப்புகளை அதிகரிக்க ஒரே வழி” என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
பஞ்சாப் 13 எம்.பி.க்களை மக்களவைக்கு அனுப்புகிறது. பகவந்த் மான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான பிறகு, கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, 2019 ஆம் ஆண்டில் சிரோமணி அகாலி தளத்தின் (அமிர்தசரஸ்) சிம்ரன்ஜித் சிங் மானிடம் தன் வசம் இருந்த ஒரே மக்களவை தொகுதியான சங்ரூர் தொகுதியை ஆம் ஆத்மி இழந்தது.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி போட்டியிட முடிவு செய்துள்ள கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களும் கட்சியின் அரசியல் அணுகுமுறையில் சமீபத்திய மறுசீரமைப்பில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
“முதலாவதாக, போர் இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனிப்பட்டது. மணீஷ் சிசோடியா பல தசாப்தங்களாக அவரது நண்பராகவும் தோழராகவும் இருந்து வருகிறார், நீங்கள் அவரை சிறையில் அடைத்தபோது, விஷயங்கள் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இரண்டாவதாக, 2019க்குப் பிந்தைய உத்தியின் வரம்புகளை குஜராத் அம்பலப்படுத்தியுள்ளது. மூன்றாவதாக, அனைத்து காங்கிரஸ் வாக்காளர்களும் தங்கள் கட்சி மீது அதிருப்தியாக இருந்தாலும் கூட, எங்கள் மைய அரசியலால் மயங்க மாட்டார்கள். 'பா.ஜ.க-வின் பி-டீம்' குறியீடு அங்கு ஒரு தடையாக மாறும்," என்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.
கெஜ்ரிவாலின் பேச்சுகளைத் தவிர, ஆம் ஆத்மியின் களத் திட்டத்தில் ஒரு மாற்றமும் மற்ற இடங்களில் தெரிகிறது. பாராளுமன்றத்தில், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கள் காங்கிரஸுடனும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் நெருக்கமாக ஒருங்கிணைத்து, மற்றவர்களிடமிருந்து ஒரு தனித்துவமான பாதையை அமைக்கும் விருப்பத்திலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.
பாராளுமன்றத்தில் இருந்து விலகி, காங்கிரஸ் அல்லாத மற்றும் பா.ஜ.க அல்லாத கட்சிகளை "ஜி-8 ஆளுமைத் தளத்தின்" கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் ஆம் ஆத்மி வழிநடத்துகிறது. இந்த மாத தொடக்கத்தில், கேரளா, பீகார், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் அழைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் இரவு உணவு மாநாட்டை நடத்த முடியாமல் போனதால், இந்த முயற்சி தடைபட்டது. பல முதல்வர்கள் கடமைகளை காரணம் காட்டி மாநாட்டை தவிர்த்தனர்.
ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி.,யும் பொதுச் செயலாளருமான (அமைப்பு) சந்தீப் பதக் கூறுகையில், “அந்த மாநாட்டுக்கான அழைப்பு ஒரே இரவில் வந்ததல்ல. பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகுதான் இது முடிவு செய்யப்பட்டது. அந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது…” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.