மரணமடைந்த வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு – உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரரின் மனைவி உருக்கம்!

பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Balakot attack reactions
Balakot attack reactions

Balakot attack reactions : கடந்த 14ம் தேதி அன்று, இந்திய ராணுவ வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. அதில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். அதில் இரண்டு வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா நேற்று அதிகாலை எல்லை தாண்டி. பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத தாக்குதல் நடத்தியது. இந்த விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும் படிக்க : போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்… ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பணி தீவிரம்

உயிரிழந்த ராணுவ வீரர்களின் உறவினர்கள் கருத்து :

இது குறித்து, உயிரிழந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேனி கருத்து கூறியதில் “புல்வாமா தாக்குதலுக்கு, இந்திய விமானப்படை தக்க பதிலடி கொடுத்துள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் இது உயிரிழந்த வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு இது என்றும் கூறியுள்ளார்.

இதே போல் சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியும் இந்தியாவின் இந்த தாக்குதலை வரவேற்று பேசியுள்ளார். பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Balakot attack reactions what slain crpf jawans wife says

Next Story
mi-17 chopper crash : இந்திய விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதுBudgam mi-17 chopper crash
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com