Balakot strike : பாலகோட் பகுதியில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு வெடிகுண்டும் 70 முதல் 80 கிலோ எடை கொண்டது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதுல். இதில் ஏராளமான பயங்கரவாதிகளின் பயிற்சியாளர்கள் மரணமடைந்ததாக இந்திய தரப்பு கூறியது.
இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள், கண்ட்ரோல் சிஸ்டம்கள், மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகின்றன. பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு விமானமும் 70 முதல் 80 கிலோ டி.என்.டி பயன்படுத்தப்பட்டுள்ளது.
Balakot strike
நெட் எக்ஸ்ப்ளோசிவ் குவாண்ட்டி எனப்படும் NEQ என்பது டி.என்.டியின் மொத்த எடையையும் உள்ளடக்கியது என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
இதற்கு முன்பு மிரேஜ் - 2000 போர் விமானம் மூலமாக, இஸ்ரேல் நாட்டின் ஸ்பைஸ் 2000 ப்ரிசிசன் கைய்டட் முனிசன் கண்ட்ரோல் சிஸ்டம் உதவியுடன் 1000 கிலோ வெடி பொருட்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 907 கி வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"இது வெறும் வெடிபொருட்களின் எடை குறித்தது அல்ல. அதன் வடிவமைப்பு மற்றும் எந்த திசையில் தாக்குதல் நடத்தப்பட்டது, எந்த விதமான ஈடுபொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பொருத்து தான் இந்த தாக்குதலின் வெற்றி" என்று மூத்த ராணுவ வீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமானப்படை இதுவரையிலும் SPICE 2000 PGM கண்ட்ரோல் சிஸ்டம் பயன்படுத்தியது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதையும் அளிக்கவில்லை.
மேலும் படிக்க : ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசியதில் ஒருவர் பலி.. . 32 பேர் படுகாயம்..