ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசியதில் ஒருவர் பலி.. . 32 பேர் படுகாயம்..

கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழலே கதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

By: Updated: March 7, 2019, 05:37:00 PM

Grenade explosion at Jammu bus stand : கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழலே கதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Grenade explosion at Jammu bus stand

இன்று மதியம் ஜம்மு பேருந்து நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக செய்திகள் பரவி வந்த நிலையில்,  ஜம்முவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.கே.சின்ஹா, பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்தின் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை உறுதி செய்தார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயம்பட்ட பொதுமக்கள் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் ஒருவர் பரிதமாக உயிரிழந்தார். 32 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

எப்போதும் அதிக கூட்டமாக இருக்கும் இந்த பேருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட போது மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்ததால் உயிர் சேதாரம் அதிகம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் சின்ஹா. மேலும் அரசு பேருந்து ஒன்று இந்த தாக்குதலில் பெரும் சேதாரத்தை சந்தித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களில் 11 நபர்கள் காஷ்மீர் மக்கள், இருவர் பிஹாரை சேர்ந்தவர்கள். ஒருவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மற்றொருவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது முதல் கட்ட தகவலாக வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : எப்.16 போர் விமானத்தை பயன்படுத்திய பாகிஸ்தான்.. அமெரிக்கா சொல்லும் முக்கிய விவரங்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Grenade explosion at jammu bus stand 18 injured

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X