Ban Tiktok App download : சமூக வலைதளங்களில் திரும்பிய திசை எங்கும் சொந்தமாக வீடியோக்களை எடுத்து பதிவேற்றி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். டிக்டாக் செயலியில் ஆரம்ப கால கட்டங்களில் நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்றோர்களின் மிக முக்கியமான நகைச்சுவை துணுக்குளை வீடியோவாக பதிவிட்டு வந்தனர்.
பின்னர் குழந்தைகளை வைத்து வீடியோக்கள் வெளியானது. ஆடல் திறமை கொண்டவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாக இந்த டிக்டாக் செயலியினை பயன்படுத்தினார்கள். நாளாக நாளாக இதில் வெளியாகும் வீடியோக்கள் அறுவறுக்கத் தக்கதாகவும் , ஆபாசம் உடையதாகவும் மாறியது. பல்வேறு சமயங்களில் முகம் சுழிக்கும் வகையில் வீடியோக்கள் வெளியாகத் துவங்கின.
டிக்டாக் செயலி மாற்றும் ப்ராங்க் வீடியோக்களுக்கு தடை
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நேற்று Prank Video வீடியோக்கள் எனப்படும் குறும்பு வீடியோக்கள் பதிவேற்றத்தை தடை செய்ய உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். பின்னர், டிக்டாக் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
சீன செயலியான இந்த செயலியை 104 மில்லியன் இந்தியர்கள் உபயோகித்து வருகின்றனர். ஆரம்பத்தில் தமிழகத்தில் மட்டும் தடை விதிக்க தமிழக தொழில்நுட்ப அமைச்சர் எம். மணிகண்டன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மத்திய அரசின் உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை என்று அவர் கூறினார். நேற்று நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் அடங்கிய அமர்வு, டிக்டாக் செயலியை தடை விதிக்க வழங்கப்பட்ட மனுவினை விசாரித்தது.
இந்தோனேசியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது மற்றும் அமெரிக்காவில் குழந்தைகள் இணைய பாதுகாப்புச் சட்டம் ஆகியவறை மேற்கொள்காட்டி, இந்தியாவிலும் இந்த செயலிக்கான வரைமுறையை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
ப்ளூ வேல் போன்ற வீடியோ கேம்களால் ஏற்படும் தீமையை நாம் அறிந்தும், இது போன்ற செயலிகள் விசயத்தில் நாம் மெத்தனப் போக்காக செயல்படுகிறோம் என்று அவர்கள் கூறினார்கள். பலரின் டிக்டாக் வீடியோக்களை ஒளிபரப்பும் சேனல்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை யை ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.
மேலும் படிக்க : இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்த வாட்ஸ்ஆப்…