வங்கதேசத்தில், ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான அன்வருல், கடந்த மே 12-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து மே 18 அன்று கொல்கத்தா காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
கொல்கத்தாவின் பராநகர் காவல் நிலையத்தில் முதற்கட்ட புகாரை பதிவு செய்ததைத் தொடர்ந்து, வங்கதேச எம்.பி.யின் கடைசி இருப்பிடம் நகரின் நியூடவுன் பகுதிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை போலீசார் உறுதிப்படுத்தினர். இதற்கிடையில், மூன்று முறை எம்.பி.யாக இருந்த அன்வருல், நியூடவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒருவரைச் சந்திக்கச் சென்ற இடத்தில் கொல்லப்பட்டதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க : போர்ஷே விபத்து: தெருவில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? நீதிபதி காட்டம்
மேலும், கலிகஞ்ச் உபாசிலா அவாமி லீக்கின் தலைவரான அன்வருல் அசிம், தனது குடும்ப நண்பரான கோபால் பிஸ்வாஸை மே 12 அன்று இரவு 7 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டிற்குச் சந்திக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
மறுநாள், ஜூன், 13ல், டாக்டரைப் பார்க்க வேண்டும் எனக்கூறி, மதியம், 1:41 மணிக்கு, கோபாலின் வீட்டில் இருந்து, அன்வருள், டாக்டரை பார்க்க சென்றார். மாலையில் திரும்புவதாகவும் கூறினார். பிதான் பூங்காவில் உள்ள கல்கத்தா பப்ளிக் பள்ளியின் முன் டாக்ஸியில் ஏறி கிளம்பியுள்ளார்.
இந்த நிலையில் அவர் சடலாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக டாக்காவில் ஒருவரிடம் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“