Admit cards, list of candidates in Bengal minister Partha Chatterjee’s house: ED to court: தொடக்கப் பள்ளி ஆசிரியர் பதவிகளுக்கான பட்டியல் எண்களுடன் 48 தேர்வர்களின் பட்டியல்; ஹால் டிக்கெட் உட்பட குரூப் D ஊழியர்களை நியமனம் செய்வது தொடர்பான ஆவணங்கள்; மற்றும், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் லெட்டர்ஹெட்டின் கீழ் தேர்வர்களின் பட்டியல்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற நீதிமன்ற பதிவுகளின்படி, மேற்கு வங்க தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் இருந்து ஜூலை 22 அன்று மாநிலப் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) நடத்திய சோதனையின் போது மீட்கப்பட்ட பதிவுகளில் இவையும் அடங்கும்.
இதையும் படியுங்கள்: மே.வங்க அமைச்சர் கைது: போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்கும் மம்தா
மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் உள்ள பார்த்தா சாட்டர்ஜி, ஜூலை 23 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 2016 இல் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் போது அவர் மாநிலத்தின் கல்வி அமைச்சராக இருந்தார்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பார்த்தா சாட்டர்ஜியை எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ கோரி ஜூலை 23 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற பதிவுகளில் அமலாக்கத்துறை தனியாக தாக்கல் செய்த கைது குறிப்பும் அடங்கியுள்ளது. ஜூலை 23 ஆம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு கைது செய்யப்பட்ட பிறகு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பார்த்தா சாட்டர்ஜி நான்கு முறை போன் செய்தும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று, “கஸ்டடியில் எடுக்கப்பட்ட நபர் தெரிவிக்க விரும்பும் உறவினர்/நண்பரின் பெயர்” என்ற பிரிவில் நீதிமன்ற பதிவுகள் கூறுகிறது.
கொல்கத்தா மண்டல அலுவலகம் II, அமலாக்கத்துறையின் புலனாய்வு அதிகாரியும் உதவி இயக்குநருமான மிதிலேஷ் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த குறிப்பில், பார்த்தா சாட்டர்ஜி 2.32, 2.33, 3.37 மற்றும் 9.35 மணிக்கு முதலமைச்சரை அழைத்ததாகக் கூறுகிறது. மேலும், கைது மெமோவில் கையெழுத்திட அமைச்சர் மறுத்துவிட்டார் என்றும் அந்த குறிப்பு கூறுகிறது.
ஜூலை 24 அன்று, உயர் நீதிமன்றம்
அமலாக்கத்துறை மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள பதிவுகளில், பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும், வழக்கில் இணை குற்றவாளியுமான அர்பிதா முகர்ஜியின் “அசையா சொத்துக்கள்” மற்றும் “நிறுவனங்கள்” ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்களும் அடங்கும். அமலாக்கத்துறை தகவலின்படி, பார்த்தா சாட்டர்ஜி ஒரு குறிப்பிட்ட மொபைல் எண் மூலம் அர்பிதா முகர்ஜியுடன் “வழக்கமான தொடர்பில்” இருந்தார்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், 9-12 ஆம் வகுப்பு வரையிலான உதவி ஆசிரியர்கள் மற்றும் குரூப் D ஊழியர்களின் வேலைவாய்ப்பில் “பணம் பெற்றுக் கொண்டு சட்டவிரோத நியமனத்தில்” பார்த்தா சாட்டர்ஜி ஈடுபட்டுள்ளார் என்றும் அமலாக்கத்துறை தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.
அர்பிதா முகர்ஜியின் டோலிகஞ்ச் வீட்டில் இருந்து ரூ.20 கோடி மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது “சட்டவிரோதமான நியமனங்கள் வழங்கிய குற்றச் செயல்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட குற்றத்தின் வருமானத்தைத் தவிர வேறொன்றுமில்லை…” என்று விவரிக்கப்பட்டுள்ளது.
அதில், “20க்கும் மேற்பட்ட செல்போன்கள்… திருமதி அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டவை, அவற்றின் நோக்கம் மற்றும் பயன்பாடு இன்னும் கண்டறியப்படவில்லை” என்று மனு பட்டியலிடுகிறது.
உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தனது மனுவில், கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் குறித்து விவரிக்கையில், “…குரூப் D பணியாளர்கள் நியமனம் தொடர்பான ஆவணங்கள்… விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட்கள் போன்றவை, 2016 ஆம் ஆண்டின் குரூப் D பதவிக்கான இறுதி முடிவுகளின் பட்டியல், இந்திரனில் பட்டாச்சார்யாவின் எழுத்தர் பதவிக்கான சான்றுகள் மற்றும் நேர்முகத்தேர்வு சரிபார்ப்புக்கான அறிவிப்பு கடிதங்கள்… ” என்று குறிப்பிட்டுள்ளது. அமலாக்கத்துறை இந்திரனில் பட்டாச்சார்யா பற்றிய விவரங்களை விவரிக்கவில்லை.
“குரூப் டி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் பட்டியல் அடங்கிய ஸ்ரீ ஆனந்த தேப் அதிகாரியின் லெட்டர்ஹெட், சமாபதி தாக்கூரின் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான (குரூப் டி) 3வது மண்டல அளவிலான தேர்வுத் தேர்வுக்கான அட்மிட் கார்டு, சமாபதி தாக்கூரின் எழுத்தர் மற்றும் குரூப் டி பணியாளர்களை பணியமர்த்துவதற்கான விண்ணப்பப் படிவம், 48 பேரின் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான பட்டியல், பட்டியல் எண் போன்றவை,” குரூப் D பணியாளர்களை நியமிப்பதில் பார்த்தா சாட்டர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதைக் குறிக்கிறது.
சமாபதி தாக்கூர் பற்றி விவரங்களை அமலாக்கத்துறை விவரிக்கவில்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, மைனகுரியின் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ்
மேலும், என் மகன் எம்.எஸ்.சி, பி.எட், மகள் எம்.ஏ ஆங்கிலம் மற்றும் பி.எட் படித்து முடித்துள்ளார். அவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்க முயற்சித்தேன் ஆனால் அதுவும் நடக்கவில்லை., என்று அனந்த தேப் அதிகாரி கூறினார்.
அமலாக்கத்துறையின் மனுவின்படி, “பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது குற்றத்தின் வருமானம் தொடர்பான பல குற்றவியல் ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் விசாரிக்கப்பட உள்ளது.”
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் குரூப் சி & டி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. ஆட்சேர்ப்பு மோசடியில் பணமோசடி அம்சம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil