Bengaluru men bought liquor for rs 52,841 : 40 நாட்கள் கழித்து நேற்று பல்வேறு மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் போதுமான அளவு சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மக்கள் முந்திக் கொண்டு சென்று மதுவை வாங்க முயன்றனர்.
மேலும் படிக்க : சிறப்பு கொரோனா வரி: டெல்லியில் மதுபானம் விலை 70% உயர்வு
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ. 52,841-க்கு தனிநபர் ஒருவர் மதுபானங்களை வாங்கியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் மொத்தமாக 17 ரக மதுபானங்களை, 128 போத்தல்களில் வாங்கியிருக்கிறார். தவரே கேரே சாலையில் அமைந்திருக்கும் வெணிலா மதுபான கடையில் இவர் பர்சேஸ் செய்த மதுபானங்களின் பில்களை புகைப்படமாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர்களின் இந்த அதீத ஆர்வத்தை பார்த்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.
கள்ளச்சாராயம், வீட்டிலேயே சாராயம் என்று மக்கள் இறங்க, தேடித் தேடி அவர்களை கைது செய்வதையும் மற்றொருபுறம் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நேற்று மதுபான கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம் அனைவரையும் கவலை கொள்ள வைக்கிறது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
மேலும் படிக்க : கோயம்பேடு கற்றுத் தந்த பாடம் போதாதா? மதுவிற்காக விதிகளை காற்றில் பறக்கவிட்ட ”குடிமகன்கள்”!
பல்வேறு மாநிலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, கூடுதல் விலையில் மதுபானங்களை விற்க துவங்கியுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் சமூக இடைவெளி சரியான முறையில் பின்பற்றப்படாத காரணத்தால் கடைகள் நேற்று மூடப்பட்டது. வருகின்ற 7ம் தேதி முதல் தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil