Advertisment

”என் வாழ்நாள் முழுவதும் நான் சமஸ்கிருதம் படித்தேன்... ஆனால்” - வருந்தும் பேராசிரியர் ஃபிரோஸ் கான்!

தகுதியுடையவர்கள் யாரும் இந்து பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் எடுக்கலாம். இதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BHU students protest Sanskrit Assistant Professor Firoze Khan

BHU students protest Sanskrit Assistant Professor Firoze Khan

 Avaneesh Mishra

Advertisment

BHU students protest Sanskrit Assistant Professor Firoze Khan : 11 நாட்களுக்கு முன்பு துணை பேராசிரியராக வாரணாசி இந்து பல்கலைகழத்தில் சேர்ந்திருக்கிறார் ஃபிரோஸ் கான். சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத இலக்கியம் கற்பிக்க வந்தார். ஆனால் தற்போது அவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களாக அவர் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் காணவில்லை.

20 எஸ்.வி.டி.வி மாணவர்கள், துணை வேந்தர் வீட்டின் முன்பு அமர்ந்து, கானின் அப்பாய்ண்ட்மெண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். 7ம் தேதிக்கு பிறகு அங்கு வகுப்புகளே எடுக்கப்படவில்லை. ஃபிரோஸ் கானோ மீண்டும் மாணவர்கள் படிக்க வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டிருந்தேன். நான் தற்போது அதனை கற்றுத் தர வந்தேன். ஆனால் நான் ஒரு முஸ்லீம் என்பது தற்போது பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.

சாஸ்திரி (இளங்கலை), ஷிக்‌ஷா சாஸ்திரி (பி.எட்), ஆச்சரியா (முதுகலை) பட்டங்களை பெற்ற இவர் இறுதியாக 2018ம் ஆண்டு ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தானில் முனைவர் பட்டம் பெற்றார். நெட் மற்றும் ஜே.ஆர்.எஃப் முடித்துள்ளார்.  என்னுடைய 2ம் வகுப்பில் இருந்து நான் சமஸ்கிருதம் படித்து வருகிறேன். என்னுடைய ஊர் பக்ரூவில் 30%க்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள். என்னுடைய மதகுருவோ, இந்த சமூகமோ நான் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள கூடாது என்று கூறவில்லை. எனக்கு குரான் குறித்து அதிகம் தெரியாது. ஆனால் சமஸ்கிருத இலக்கியம் குறித்து நிறைய அறிவேன். என்னுடைய பகுதியில் வாழும் முக்கிய இந்து பிரமுகர்கள் என்னுடைய சம்ஸ்கிருத ஞானத்தை போற்றியிருக்கின்றனர். யாரும் என்னை ஒரு முஸ்லீமாக மட்டுமே கருதவில்லை என்று கூறும் கானின் தந்தை ரம்ஜான் கானும் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றவர்.

கிருஷ்ணகுமார் என்ற எஸ்.வி.டி.வி மாணவர் மற்ற மூன்று மாணவர்களுடன் அமர்ந்து போராட்டம் செய்து கொண்டிருந்தார். ஒருவர் நம்முடைய உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவரால் நம்மையும் நம்முடைய தர்மங்களையும் புரிந்து கொள்ள இயலுமா என்று கேள்வி எழுப்பினார். அவருடன் ஷாஷிகாந்த் மிஸ்ரா, சுபம் திவாரி, சக்ரபாணி ஒஜா ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மிஸ்ரா இந்த போராட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று குறிப்பிட்டார். ஆனாலும் அவர் கடந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸில் இருந்ததாகவும் அவர் அறிவித்தார். ஓஜா ஏ.பி.வி.பியில் உறுப்பினர். திவாரியோ ஏ.பி.வி.பி மற்றும் கேந்திரிய ப்ராமின் மகாசபையில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார்.

To read this article in English

இந்து பல்கலைக்கழக நிர்வாகத்தால் எஸ்.வி.டி.வி மாணவர்களின் போராட்டதை தடுத்து நிறுத்த இயலவில்லை. கான் இது குறித்து கூறும் போது “போராடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் நான் ஒரு இஸ்லாமியராக இருக்கும் போது இந்துயிசம் குறித்து எப்படி பாடம் எடுப்பேன் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் கல்வி என்று வரும் போது சமஸ்கிருத இலக்கியங்களை மட்டுமே நாம் படிக்க போகின்றோம். அபிக்யான் சகுந்தலம், உத்தர ராம்சரித்திரம், மகாகாவியம், ரகுவன்ஷ் மகா காவியம், ஹர்ஷ் சரித்திரம் இது போன்று தான் கற்பிக்கப்படும். இதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பினார்.

பழங்கால வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் பிரிவில் பாடம் எடுக்கும் பேராசிரியர் மகேஷ் ப்ரசாத் “சாதி மற்றும் மதத்தால் பல்கலைக்கழகத்தில் ஆவது ஒன்றும் இல்லை. இரண்டுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. முந்தைய காலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் தற்போதைய வாய்ப்புகளை பயன்படுத்தி முன்வருகின்றார்கள். இது தான் மாறிக் கொண்டிருக்கும் இந்தியா. தகுதியுடையவர்கள் யாரும் இந்து பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் எடுக்கலாம். இதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் படிக்க : ‘அடிக்கவே இல்லை’ – டெல்லி போலீஸ் ; விபரீதமாக முடிந்த ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம்!

ராஷ்ட்ரிய சமஸ்கிருத சான்ஸ்தனத்தில் கான் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு வகுப்பு எடுத்திருக்கிறார் அந்த நிர்வாகத்தின் முதல்வர் அர்க்நாத் சௌத்ரி. கான் மிகவும் நல்லவர், இனிமையாக பேசக் கூடியவர், எளிதில் அனைவரும் பழக்கூடியவர் என்று தன்னுடைய நினைவு கூறுகிறார். கானின் சாஸ்திரி படிப்பின் இறுதி ஆண்டின் போது அவருக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்திருக்கிறார் அரக்நாத்.

10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து பேசிய போது ஃபிரோஸ்கான் “வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் நான் கற்பிக்க வேண்டுமென்றால் நான் ஒரு இந்துவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் நான் சமஸ்கிருத இலக்கியம் மட்டுமே கற்றுத் தர வந்தேன். ஏற்கனவே என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதைத்தான் நான் கற்றுத்தரப் போகின்றேன். போராட்டக்காரர்களின் மனதில் என்ன இருக்கின்றதோ அதை நான் கட்டாயமாக மாற்றுவேன் என்று பதில் கூறியுள்ளார் கான்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment