Bihar Assembly Election Result 2020 : இன்று புதன்கிழமை அதிகாலையில் பீகாரில் அனைத்துத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் முடிந்தது. 125 இடங்களில் பாஜக- ஜே.டி.யு அணி வென்றது. நிதிஷ்குமார் 4-வது முறையாக முதல்வர் ஆகிறார்.
Bihar Election Results Live: ஆங்கிலத்தில் வாசிக்க
பீகார் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் ஆர்.ஜே.டி- காங்கிரஸ் அணி முன்னிலையில் காணப்பட்டது. காலை 10 மணிக்கு பிறகு பாஜக- ஜே.டி.யு அணி முன்னிலை பெறத் தொடங்கியது.
காத்திருக்கும் சவால்கள்: பீகாரில் புதிய அரசு செய்ய வேண்டியவை என்ன?
எனினும் ஆர்.ஜே.டி கடும் போட்டியைக் கொடுத்தது. நேற்று பிற்பகலில் இரு அணிகளும் மிகவும் நெருக்கமான போட்டியை வாக்கு எண்ணிக்கையில் எதிர்கொண்டன. எனினும் பாஜக அணி அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளையொட்டி தனது முன்னிலைக் கணக்கை தொடர்ந்தபடியே இருந்தது.
புதன்கிழமை (இன்று) அதிகாலையில் அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. முடிவில் பாஜக. - ஜேடியு அணி 125 இடங்களையும், ஆர்.ஜே.டி - காங்கிரஸ் அணி 110 இடங்களையும் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக ஆர்.ஜே.டி தரப்பில் கூறப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Live Blog
Bihar Election 2020 Results Live : பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் உடனடியாக தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் லைவ் பிளாகில் இணைந்திருங்கள்
243 உறுப்பினர் அடங்கிய பீகார் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 125 தொகுதிகள் கிடைத்தது. இதனையடுத்து, தற்போது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பீகார் தேர்தலில், பிஜேபிக்கு 74 தொகுதிகளும் ஐக்கிய ஜனதா தள் கட்சிக்கு 43 தொகுதிகளும் கிடைத்தன.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் பீகார் தலைவர் அக்தர் உல் இமான் ஆமர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 6 முறை அந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஜலீல் மஸ்தானை தோற்கடித்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அக்தர் உல் இமான்.
மும்முனை போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிராண்ட் டெமாக்ரடிக் செக்யூலர் ஃப்ரெண்ட் எந்த ஒரு தாக்கத்தையும் இந்த தேர்தலில் ஏற்படுத்தவில்லை. ஆர்.எல்.எஸ்.பி கட்சி மொத்தமாக 104 இடங்களில் போட்டியிட்டது ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. பி.எஸ்.பி. கட்சி 80 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இந்திய வரலாற்றில், வெகு சில முதல்வர்களை தான் மக்கள் நான்காவது முறையாகவும் நம்புவார்கள் என்று பாஜக தலைவரும் பீகாரின் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி அறிவித்துள்ளார். என்.டி.ஏ கூட்டணி மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி என்றும் அவர் பேச்சு.
மோடியை பாஜக ஒரு ப்ராண்டாகவே பயன்படுத்துகிறது. எந்த ஒரு சூழலிலும், எந்த ஒரு கட்சிக்கு எதிராகவும் மோடியின் பெயரால் வெற்றி பெற முடியும். இது பாஜகவின் தேர்தல் அரசியலுக்கு சாதகமாக இருந்தாலும் அக்கட்சியின் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டுகளுக்கு பெரும் கவலை அளிக்க கூடியது. மோடி இல்லையென்றால், மோடி தோல்வியுற்றால் கட்சி பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
Good governance leads to progressive State. People of Bihar have reaffirmed their solidarity for NDA alliance. My hearty congratulations for NDA alliance in the state. Best wishes for the People of Bihar.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 11, 2020
பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், ஹசன்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். இதேபோல், இமாம்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும், இந்துஸ்தான் அவா மோர்ச்சா கட்சியின் தலைவருமான, ஜித்தன்ராம் மாஞ்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் 4-வது முறையாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார் முதல்வர் ஆகிறார். மொத்தம் 243 தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நிதிஷ்- பாஜக கூட்டணி 125 இடங்களைப் பெற்றது. இது அறுதிப் பெரும்பான்மையைவிட 3 தொகுதிகள் அதிகம்.
லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி தலைமையிலான ஆர்.ஜே.டி- காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒவைசி தலைமையிலான கட்சி 5 தொகுதிகளையும், சிராக் பஸ்வான் கட்சி ஒரு இடத்தையும், இதர வேட்பாளர்கள் 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
கட்சி வாரியாகப் பார்த்தால் ஆர்.ஜே.டி 75 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை பாஜக 74 தொகுதிகளுடன் கைப்பற்றியிருக்கிறது. ஜேடியு 43 இடங்கள், காங்கிரஸ் 19 இடங்கள், சிபிஐ எம்.எல் 11 இடங்கள், ஒவைசி கட்சி 5, ஹெஏஎம்(எஸ்) 4, விஐபி 4, சிபிஐ-எம் 3, எல்.ஜே.பி 1, மற்றவர்கள் 2 என பிடித்திருக்கிறார்கள்.
புதன்கிழமை (இன்று) அதிகாலையில் அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. முடிவில் பாஜக. - ஜேடியு அணி 125 இடங்களையும், ஆர்.ஜே.டி - காங்கிரஸ் அணி 110 இடங்களையும் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக ஆர்.ஜே.டி தரப்பில் கூறப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
வேளாண் பொருள்கள் உற்பத்தியில் சில முன்னேற்றங்கள் தென்பட்டாலும், வேளாண்மை வளர்ச்சி மக்களின் நல்வாழ்வுக்கு சிறந்த பாதையை அமைத்து தரவில்லை. வறுமையில் தள்ளப்படுபவர்களின் போக்கு அதிகரித்து வருகிறது மற்றும் வேலையின்மை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
மாநில பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை, தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது வெறும் 8.7 சதவீத விழுக்காடாக உள்ளது .
துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களை கொண்டுவருவதில் தான் பீகார் மாநிலத்தின் எதிர்காலம் உள்ளது.
மாநிலங்களில் வலுவான கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்துவது எப்போதுமே தேசிய கட்சிகள் பின்பற்றும் ஒரு தந்திரமாகும். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு எதிராகவும், பஞ்சாபில் அகாலிதளத்திற்கு எதிராகவும் பாஜக ஆதிக்கம் செலுத்த முயன்றது. இறுதியில் இருவரும் கூட்டணியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது.
எவ்வாறு இருப்பினும் பாஜக ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும். மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு மற்றொரு கூட்டணி கட்சியை இழக்க முடியாது என்ற முடிவை எடுத்துள்ளது பாஜக. நம்பகமான கூட்டணி கட்சி பாஜக கிடையாது என்ற விமர்சனத்தை சமாளித்து வர நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் வைத்திருப்பது அக்கட்சிக்கு உதவும் என்று நம்புகிறது பாஜக.
ये उन 119 सीटों की सूची है जहाँ गिनती संपूर्ण होने के बाद महागठबंधन के उम्मीदवार जीत चुके है। रिटर्निंग ऑफ़िसर ने उन्हें जीत की बधाई दी लेकिन अब सर्टिफ़िकेट नहीं दे रहे है कह रहे है कि आप हार गए है। ECI की वेबसाइट पर भी इन्हें जीता हुआ दिखाया गया। जनतंत्र में ऐसी लूट नहीं चलेगी। pic.twitter.com/puUvIagyDz
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 10, 2020
பீகார் சட்டமன்றத் தேர்தலில், பல தொகுதிகளில் தங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால், வெற்றிக்கான சான்றிதழ்கள் தரப்படாமல் பின் தோல்வியடைந்ததாக அதிகாரிகள் அறிவித்ததாகவும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் குற்றம் சாட்டியது.
மகா கூட்டணி கட்சிகளின் வெற்றியைத் தடுக்க மாவட்ட நிர்வாகிகள் மீது முதல்வரும், துணை முதல்வரும் அழுத்தம் கொடுத்துவருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் குற்றம் சாட்டியது.
இந்த குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.தேர்தல் முடிவுகள் நியாயமாக, வெளிப்படையான முறையில் அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்தது.
RJD accusing the NDA government of delaying counting in at least 10 seats @IndianExpress
— Dipankar Ghose (@dipankarghose31) November 10, 2020
தேசிய ஜனநாயக கூட்டணியைச் சார்ந்த கட்சிகள் வேண்டுமென்றே 10 தொகுதிகளில் வாக்குப்பதிவை தாமதிப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் ஒரு "சிறந்த" போராட்டத்தை முன்நடத்தினார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
இந்த தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதையும் சரத் பவார் நினைவுபடுத்தினார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகள் முன்னணி நிலவரம்:
ஐக்கிய ஜனதாதள் - பிஜேபி கூட்டணி 123 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 112 இடங்களிலும்,
இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 8 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளன.
பீகாரில் என்டிஏ கூட்டணி நிச்சயமாக அரசாங்கத்தை அமைப்பதாக போக்குகள் தெரிவிக்கையில், ஜே.டி (யூ) ஆதரவாளர்கள் பாட்னாவில் வீதிகளில் இறங்கி கொண்டாடினர்.
On the streets in patna, the JDU has begun to celebrate @IndianExpress pic.twitter.com/8kJ7nG91nT
— Dipankar Ghose (@dipankarghose31) November 10, 2020
ஜே.டி (யு) செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், "பீகார் மக்கள் நிதீஷ் குமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், பீகார் ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி, "இது ஒரு டி -20 போட்டி போன்றது. போட்டியின் முடிவு கடைசி பந்தில் தான் தீர்மானிக்கப்படும்" என்றார்.
காங்கிரஸ் வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டாலும், "விஷயங்கள் நமக்கு சாதகமாக மாறும்" என்ற நம்பிக்கை உள்ளது. "நாங்கள் மிகவும் பின் தங்கியிருக்கவில்லை, எங்களுக்கு ஆதரவாக விஷயங்கள் மாறும்" என்றார் பீகார் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர்.
"ஈ.வி.எம் மிஷின்கள் வலுவானவை மற்றும் டேம்பர் ஃப்ரூஃப் என்று மீண்டும் மீண்டும் தெளிவாகியுள்ளது. ஈ.வி.எம்-களின் நேர்மையில் எந்த சந்தேகமும் இல்லை. இதை மேலும் தெளிவுபடுத்துவதற்கு தேவையில்லை" என்று துணைத் தேர்தல் ஆணையர் சந்திரபூஷன்குமார் இன்று பிற்பகல் தெரிவித்தார்.
பத்திரிகையாளரை சந்தித்த தேர்தல் ஆணையம், இதுவரை 1 கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகவும், இன்றிரவு வாக்கெடுப்பை முடிக்க தேர்தல் ஆணையம் நம்புவதாகவும் கூறியது. "கோவிட் நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடியில் 63% வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு, 38 மாவட்டங்களில் ஆரம்பத்தில் பீகாரில் எழுந்த உயர்மட்டப் போருக்குப் பிறகு, தேஜஷ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சியின் பிரமாண்ட கூட்டணியை விட, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
JDU office in Patna in much more buoyant mood now. Drums and all are out @IndianExpress pic.twitter.com/Kh0xkUs3SC
— Dipankar Ghose (@dipankarghose31) November 10, 2020
மதியம் 12.15 மணிக்கு போக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு தெளிவான முன்னிலை காட்டினாலும், பாஜக மற்றவர்களுக்கு எதிரான இடைவெளியை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் ஒரு சாவடிக்கு அதிகபட்சமாக 1,500 முதல் 1,000 வரை வாக்காளர்களைக் கொண்டிருந்தது. இது வழக்கத்தை விட முடிவுகள் மெதுவாக இருக்க காரணமாகிறது. மதியம் வரை 10% வாக்குகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.
கடுமையான போட்டியைத் தொடர்ந்து, என்.டி.ஏ 124 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 102 இடங்களில் ஆர்.ஜே.டி கட்சியும், எல்.ஜே.பி ஏழு இடங்களிலும் முன்னணியில் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஆர்.ஜே.டி முன்னணியிலும் அதனைத் தொடர்ந்து பாஜக, ஜே.டி.யு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
என்.டி.ஏ 52 இடங்களில் முதலிடத்தில் உள்ளது. பாஜக 28 இடங்களிலும், ஜேடியு 20 இடங்களிலும், விகாஷீல் இன்சான் கட்சி 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மகாகத்பந்தன், 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆர்ஜேடி 29, காங்கிரஸ் 12 மற்றும் இடதுசாரிகள் 5 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. லோக் ஜான் சக்தி கட்சி மூன்று இடங்களிலும், AIMIM ஒரு இடத்தில் முன்னிலையிலும் உள்ளது (காலை 10.00 மணி நிலவரப்படி)
ரன்னிசய்த்பூரில், ஜே.டி.யூ தலைவர் பங்கஜ் குமார் மிஸ்ரா, ஆர்.ஜே.டி யின் மங்கிதா தேவியை எதிர்த்து முன்னிலை
ராம்கரில், பகுஜன் சமாஜ் கட்சியின் அம்பிகா சிங், பாஜகவின் அசோக் குமார் சிங் எதிர்த்து முன்னிலை
ரகுநாத்பூரில், ஆர்ஜேடியின் ஹரிஷங்கர் யாதவ், எல்ஜேபியின் மனோஜ் குமார் சிங்கை விட முன்னிலை
ஜாஜாவில், ஜே.டி.யுவின் தாமோதர் ராவத், ஆர்.ஜே.டி ராஜேந்திர பிரசாத்தை எதிர்த்து முன்னிலை
ஹாஜிப்பூரில், பாஜகவின் அவதேஷ் சிங் சற்று வித்தியாசத்தில் முன்னிலை
கார்காவில், பாஜகவின் க்யான்சந்த் மஞ்சி சற்று முன்னணி
பெகுசாரையில், ஐ.என்.சி வேட்பாளர் அமிதா பூஷண் முன்னிலை
பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இப்போதுவரை, பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே போட்டி இறுக்கமாக இருக்கிறது. தனிநபர் இடங்களின் வாக்குகள் மற்றும் முடிவுகளின் எண்ணிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பின்வரும் வலைத்தளங்களில் நேரடியாக அறிவிக்கப்படும் - eciresults.nic.in, eci.gov.in, மற்றும் results.eci.gov.in.
பீகார் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் ஆர்.ஜே.டி- காங்கிரஸ் அணி முன்னிலையில் காணப்பட்டது. காலை 10 மணிக்கு பிறகு பாஜக- ஜே.டி.யு அணி முன்னிலை பெறத் தொடங்கியது.
எனினும் ஆர்.ஜே.டி கடும் போட்டியைக் கொடுத்தது. நேற்று பிற்பகலில் இரு அணிகளும் மிகவும் நெருக்கமான போட்டியை வாக்கு எண்ணிக்கையில் எதிர்கொண்டன. எனினும் பாஜக அணி அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளையொட்டி தனது முன்னிலைக் கணக்கை தொடர்ந்தபடியே இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights