Bihar CM Nithish Kumar talks about migrant workers : கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றனர். வெறும் கால்களில், சுட்டெரிக்கும் வெயிலில் அவர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது மற்ற மாநிலங்களிலிருந்து தங்களின் சொந்த மாநிலமான பீகாருக்கு வருபவர்களுக்கு ரூபாய் 8,500 கோடி செலவு செய்துள்ளோம். எனவே அவர்கள் தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்.
மேலும் பீகாரில் இருந்து வேலை காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று பணியாற்றிய தொழிலாளர்களை அம்மாநில அரசுகள் கவனிக்கவில்லை. அம்மாநில வளர்ச்சிக்காக அவர்களின் உழைப்பு பயன்படுகிறது. ஆனால் அந்த உழைப்பை அம்மாநில அரசுகள் அலட்சியம் செய்துவிட்டது.
நாம் அனைவரும் ஒரே நாட்டில் தான் வசிக்கின்றோம். ஆனால் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மக்களை நாம் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அழைக்கின்றோம். ஆனால் அது சரியான அணுகுமுறை இல்லை. ஏன் நாம் அவர்களை பிரவேசி என்று அழைக்கின்றோம்? ஒரே நாட்டில் வசிப்பவர்களிடம் இந்த பாகுபாடு ஏன் வந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பீகார் மாநிலத்திற்கு திரும்பி வந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil