உலகை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள்; 2020 இன்னும் எத்தனை சோதனைகளை தரப் போகிறதோ?

இதன் மீது அமைந்திருக்கும் சிகரத்தின் உயரம் 310 மீட்டர்களாகும். இந்த விண்கல் 46,400 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

By: Updated: June 4, 2020, 12:38:09 PM

Three Monster Asteroids Headed for Earth in June : கொரோனா ஒரு பக்கம் தொல்லை தருகிறது என்றால் மற்றொரு பக்கம், மாபெரும் புயல்களையும் இயற்கை சீற்றங்களையும் எதிர் கொண்டு வருகின்றோம். இந்த சூழலில் தற்போது மூன்று விண்கற்கள் வேறு உலகை நோக்கி வருகிறதாம். ஏற்கனவே மூச்சுவிட நேரமில்லாமல், அடுத்து என்ன ஆகுமோ என்று எதிர்காலம் குறித்த கவலை அனைவர் மத்தியிலும் பீடித்திருக்கும் நிலையில் இவை மேலும் அனைவரையும் கவலை கொள்ள தான் வைக்கிறது. ஜூன் 6ம் தேதி துவங்கி இந்த விண்கற்கள் உலகை நோக்கி வர உள்ளதாக நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் ப்ரௌசர் (NASA’s Near-Earth Object (CEO) browser) அறிவித்துள்ளது.

ASTEROID 2002 NN4

தற்போது தொடர்ச்சியாக வர இருக்கும் மூன்று எரிகற்களில் இதுவே முதன்மையானது. மிகவும் பெரிய அளவு கொண்டதும் கூட. ஜூன் 6ம் தேதி காலை 03:20 மணி (UTC) அளவில் இந்த எரிகல் பூமிக்கு மிக அருகில் அதாவது 5.09 தொலைவில் பயணிக்க உள்ளது. இந்த எரிகல்லின் அளவை, 5 கால்பந்து மைதானத்தின் ஒன்றிணைவாக அறிவிப்பது வழக்கம். இதன் டையாமீட்டர் 570 மீட்டராகும். இந்த எரிகல் மணிக்கு 40,140 கி.மீ என்ற வேகத்தில் பயணித்து வருகிறது.

ASTEROID 2013 XA22

இந்த விண்கல் சரியாக ஜூன் 8ம் தேதி அன்று மதியம் 03:40 (UTC) மணி அளவில் பூமிக்கு நெருக்கமாக பயணிக்க உள்ளது. மேலே கூறியிருக்கும் விண்கல்லைக் காட்டிலும் மிக நெருக்கமாக பூமியை ஒட்டி பயணிக்க உள்ளது. 2.93 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த எரிகல் பயணிக்க உள்ளது. இந்த மூன்று விண்கற்களிலும் இது தான் மிகவும் சிறியது. இதன் டையாமீட்டர் 160 மீட்டர். இந்த எறிகல் மணிக்கு 24 ஆயிரத்து 050 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ASTEROID 2010 NY65

10 வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த விண்கல்லும் asteroid 441987, ஜூன் மாதம் உலகை ஒட்டி பயணிக்க உள்ளது. ஜூன் 24 அன்று காலை 06:44 மணி அளவீல் இந்த விண்கல் பூமியை ஒட்டி பயணிக்க உள்ளது. இதன் விட்டமானது மேலே கூறியிருக்கும் இரண்டு விண்கற்களுக்கும் இடைப்பட்ட அளவில் தான் உள்ளது. இருப்பினும் இதன் மீது அமைந்திருக்கும் சிகரத்தின் உயரம் 310 மீட்டர்களாகும். இந்த விண்கல் 46,400 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பூமிக்கு மிக அருகில் அதாவது 3.76 கி.மீ தொலைவில் இந்த விண்கல் பூமியை கடந்து செல்லும்.

மேலும் படிக்க ; கெத்தா, தைரியமா, தில்லோட இந்த நாய் போடுற சண்டை இருக்கே! ப்ப்ப்பா..

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Three monster asteroids headed for earth in june

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X