scorecardresearch

டெல்லி ரகசியம்: ஃபிட்னஸ் எதிர்ப்பார்க்கும் மோடி… பேட்மிண்டனில் களமிறங்கிய பாஜக தலைவர்

தினமும் ஒரு மணி நேரம் பேட்மிண்டன் விளையாடுவதற்காக கான்ஸ்டிடியூஷன் கிளப்பிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்

டெல்லி ரகசியம்: ஃபிட்னஸ் எதிர்ப்பார்க்கும் மோடி… பேட்மிண்டனில் களமிறங்கிய பாஜக தலைவர்

பாஜக எம்.பி.க்களிடம் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்போது, கட்சி தலைவர்களுக்கு புதிய பணி ஒன்று வந்துள்ளது. விளையாட்டு திறமைகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தாங்களும் உடல் ரீதியாக ஃபிட்-ஆக இருக்க வேண்டும் என்பது தான்.

கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் பொறுப்பாளரான பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங், பிரதமரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். அதன்படி, தினமும் ஒரு மணி நேரம் பேட்மிண்டன் விளையாடுவதற்காக கான்ஸ்டிடியூஷன் கிளப்பிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சிங் தனது சக கட்சித் தலைவர்களையும் தன்னுடன் சேரும்படி அழைத்து வருகிறார்.

வாரணாசியும் ஹேமமாலினியும்

செவ்வாயன்று உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த காஷி திரைப்பட விழாவில், எம்.பி ஹேமமாலினியின் நடனத்துடன் கூடிய நடிப்பு மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது.

16 வயதில் நடிக்கத் தொடங்கிய அவர், தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் இதேபோன்ற நிகழ்ச்சிகளுக்காக வாரணாசிக்கு வந்துள்ளார். நிகழ்ச்சியில் அவரது நடனம் மற்றும் நடிப்பு சிவன்-துர்கா மற்றும் மகிஷாசுர மர்தினியை அடிப்படையாகக் கொண்டது.

அவரது நடிப்பைப் பார்த்துவிட்டு, அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹேமா மாலினியை மக்கள் “கனவுக் பெண்” என்று அழைப்பார்கள், ஆனால் இனி அவர் “துர்கா” என்று அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

ஜெனீவா பணி

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியாவின் அடுத்த நிரந்தரப் பிரதிநிதியாக அனுபம் ரே நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1994-பேட்ச் IFS அதிகாரியான ரே, தற்போது டெல்லியில் உள்ள MEA இன் தலைமையகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

மெக்சிகோவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ள 1991-பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான பங்கஜ் ஷர்மாவுக்குப் பிறகு ரே பதவியேற்பார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Bjp general secretary arun singh to act on pm modi health advice