பாஜக செயற்குழு கூட்டம் : டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்றது.
பாஜக செயற்குழு கூட்டம் : தீர்மானங்கள் நிறைவேற்றம்
பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா பதவி காலம் 2019ம் ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைகிறது. எனவே கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் ராஜ்நாத் உட்பட பலரும் பங்கேற்பு
மேலும் வரும் 2019ம் ஆண்டில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி குறித்த முழு விவரத்தையும் ஆங்கிலத்தில் படிக்க:
இந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேர்தலில் பாஜகவை வீழ்த்த நினைப்பது பகல் கனவாகவே முடியும் என தெரிவித்தார்.
பாஜக செயற்குழு கூட்டம் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி :
பின்னர், தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், “கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பு
வரும் 2022ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை படைப்போம். தீவிரவாதம், மதவாதம், சாதியவாதம் இல்லாத புதிய இந்தியா 2022ஆம் ஆண்டுக்குள் படைக்கப்படும். வீடுகள் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கும் பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்பதே எதிர்க்கட்சி கூட்டணியின் நோக்கம். அவர்களிடம் தலைவரோ, கொள்கையோ இல்லை.” என்று பேசினார்.
பத்திரிக்கையாளர்களை அலுவலகத்தில் உட்கார அனுமதிக்காதீர்கள் : பாஜக நடத்தும் ஸ்டிரிக்ட் மீட்டிங்
இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2019ம் ஆண்டும் எதிர்கொள்ள இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற கையாள வேண்டிய உத்திகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.