scorecardresearch

கொல்கத்தா பேரணி : வங்கத்துப் புலிகளே உங்களுக்கு அன்பு வணக்கங்கள்… தமிழில் உரை நிகழ்த்திய ஸ்டாலின்

Mamata Banerjee Kolkata Rally Today : பிரித்து ஆளும் அரசியலை நம் நாடு நம்பியது இல்லை – மம்தா பானர்ஜி

Mamata Banerjee Kolkata Rally Today LIVE Updates
Mamata Banerjee Kolkata Rally Today LIVE Updates

Mamata Banerjee Kolkata Rally Today LIVE Updates மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Mamata Banerjee Kolkata Rally Today :

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக இன்று கொல்கத்தாவில் பாஜக அல்லாத கூட்டணி என்ற பெயரில் மம்தா பானர்ஜி தலைமையிலான பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது.

பேரணியின் நேரலை

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சி தலைவர்களின் தலைமையிலான பேரணியின் நேரலையை முகநூலில் நேரடியாக ஒளிபரப்பு வருகின்றனர்.

04:30 PM :  மம்தா பானர்ஜியின் உரை

ரத யாத்திரை என்ற பெயரில் எந்த விதமான மதக் கலவரங்களையும் நான் அனுமதிக்கா மாட்டேன். மேற்கு வங்கத்தில் பாஜகவினரால் ஒரு கலவரத்தையும் அடக்கிக் காட்ட இயலாது. மோடியின் ஆட்சிக்கு கீழ் ஒரு அச்சே தின்னும் (நல்ல நாளும்) வரவில்லை. ஆட்சியில் இருந்து பாஜகவை வெளியேற்றும் மன நிலைமைக்கு மக்கள் வந்துவிட்டனர். பிரித்து ஆளும் அரசியலை நம் நாடு நம்பியது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

03:30 PM : வங்கத்துப் புலிகளுக்கு வணக்கம் – முக ஸ்டாலின்

வங்கத்து புலிகளுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள்… தூரமாக நாம் இருந்தாலும், ஒரே நேர்கோட்டில் தான் நாம் இருக்கின்றோம் என்று தன்னுடைய தமிழ் உரையை தொடங்கினார்.

விவேகானந்தர், நிவேதிதா, சுபாஷ் சந்திர போஸ் போன்றோர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருந்த உறவைப் பற்றி பேசினார்.  அரசியலிலும் இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் வங்காளிகளும், தமிழர்களும் சகோதர சகோதரிகள் ஆவார்கள்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டதன் முக்கிய பங்கினை வங்கமும் தமிழகமும் வகிக்கிறது என்று கூறிய அவர் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்காக வங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் மம்தாவின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன் என்று கூறினார்.

03:00 PM : காங்கிரஸ் சார்பில் சோனியாவின் செய்தியை மக்களுக்கு கூறிய மல்லிகார்ஜூன கார்கே

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் இந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சோனியாகாந்தியின் செய்தியை, காங்கிரஸ் சார்பில் மக்களிடம் கொண்டு சேர்த்தார் மல்லிகார்ஜூன கார்கே.

நான் மம்தாவிற்கும் இதர கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். பொருளாதார ரீதியில் மக்கள் நலிந்துவிட்டனர். இந்தியாவின் அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கும் சக்திகளை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

02:00 PM : மேடையில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள்

திமுக தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, பகுஜன் சாம்ஜ் கட்சியின் சதீஸ் மிஷ்ரா, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டுள்ளனர்.

01:00 PM :இந்தியாவை அழிக்க கூடியிருக்கும் ஜோக்கர்களின் கூடம் இது – பாஜக விளாசல்

”பாஜக தலைவர் முகுல் ராய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யுனைட்டட் இந்தியா பேரணி குறித்து தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் மம்தாவின் தலைமையில் நடைபெறும் சர்க்கஸை மேற்கு வங்கம் மறுபடியும் காண்கின்றது. ஜோக்கர்களும் பொய் சொல்லும் கலைஞர்களும் ஒன்று கூடி இந்தியாவை அழிக்க வந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

12: 00 PM : புகைப்படங்கள்

பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள்கள் பங்கேற்று உள்ளனர். பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த நபர்களும் தங்களின் ஆதரவினை மம்தாவின் பேரணிக்கு அளித்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

11:30 AM : பாஜகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது – மு.க.ஸ்டாலின்

இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வரும் பேரணியில் கலந்து கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து தலைவர்களையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்று நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியாவை பிரித்து ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவின் நாட்கள் எண்ணப்படுகிறது என்ற செய்தியை பாஜகவிடம் சேர்க்க விரும்புகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

11:00 AM : பொதுக்கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார் மம்தா பானர்ஜீ

10: 30 AM  : ராகுல் காந்தியின் ஆதரவு

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் இந்த மாபெரும் பேரணிக்கு தன்னுடைய ஆதரவினை தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடிதம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ”பொய்யான பரப்புரைகள் மற்றும் வாக்குறுதிகளால் ஏமாற்றத்திற்கு ஆளான லட்சக்கணக்கான மக்களின் ஒன்று திரண்ட பேரணி இது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

10:00 AM – பழங்குடி சமூகத்தினர் தங்களின் முழு ஆதரவை அளித்துள்ளனர்

 

09:45 AM : சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை

இந்த பேரணியில் நாட்டின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதில் ராகுல்காந்தி,சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் ராகுல் காந்தி நேற்றைய தினம் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதினார்.

பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

09:30 AM – யார் யார் பங்கேற்கிறார்கள் ?

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதில், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவகவுடா, தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின், மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், உ.பி.யில் புதிதாக உருவாகியுள்ள சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியும் கலந்து கொள்கின்றன. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பகுஜன் சமாஜ் சார்பில் மூத்த தலைவர் சதீஷ் சந்திரா மிஸ்ரா கலந்து கொள்கிறார்.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்கிறார். கூட்டத்தில் கலந்துக் கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். நேற்று இரவு கொல்கத்தாவில் தங்கிய அவர், இன்று கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின்னர் சென்னை திரும்புகிறார்.

மேலும் படிக்க : பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி… மூன்றாம் அணி தயார்

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Bjp state parties kolkata today mega rally

Best of Express