வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி வருமான வரி உச்ச வரம்பு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: Union Budget Highlights: ரயில்வே துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு முதல் தனிநபர் வருமான வரி வரை: 2023-24 பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
வருமான வரி அடுக்குகளில் மாற்றம்
2.5 லட்சத்தில் இருந்து 6 வருமான அடுக்குகளுடன் கூடிய புதிய தனிநபர் வருமான வரி முறை 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வருமான அடுக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைத்து, வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டு, புதிய வரி கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வரி முறையின் கீழ் திருத்தப்பட்ட வரி அடுக்குகள்:
ரூ 0-3 லட்சம் வருமானத்திற்கு வரி இல்லை.
ரூ.3 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு புதிய முறையில் 5% வரி விதிக்கப்படும்.
ரூ.6 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருந்தால் புதிய முறையில் 10% வரி விதிக்கப்படும்.
ரூ.12 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு புதிய முறையில் 20% வரி விதிக்கப்படும்.
ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் புதிய வரி முறையில் 30% வரி விதிக்கப்படும்.
புதிய வரி விதிப்பில் வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் மற்றும் வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விதிப்பு இனி இயல்புநிலை வரி விதிப்பாக இருக்கும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil