scorecardresearch

சர்வதேச வாய்ப்புகளை பெற… இளைஞர்களுக்கு 30 திறன் மேம்பாட்டு மையங்கள்: நிர்மலா சீதாராமன்

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக 30 சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறுயுள்ளார்.

சர்வதேச வாய்ப்புகளை பெற… இளைஞர்களுக்கு 30 திறன் மேம்பாட்டு மையங்கள்: நிர்மலா சீதாராமன்

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக 30 சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறுயுள்ளார்.

2023-24 க்கான பட்ஜெட்டை இன்று நாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். இந்நிலையில் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள்  தொடர்ந்து குற்றச் சாட்டு வைத்தனர்.

இந்நிலையில் இந்திய நாட்டின் இளஞர்களுக்கு முக்கிய சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இளஞர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய கல்வி கொள்கை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன். வேலையில் சேர்வதற்கான திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்குவதில் மத்திய அரசு கூடுதல் முயற்சிகளை எடுக்க உள்ளது என்று கூறினார்.

Union Budget 2023-24 Live Updates

’பிரதமர் கௌஷல் விகாஸ் யோஜனா’ மூலம்  தொழிற்சாலைகள் 4.0-க்கு தேவையான கல்வி படிப்புகள் தொடங்கப்படும். மேலும் இந்த திட்டம் மூலம் கம்யூட்டர் கோடிங், AI தொழில்நுட்பம், 3டி பிரிட்டிங் ட்ரோன்ஸ் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரத்யேக பயிற்சி வழங்கப்படும்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Budget 2023 indian youth expectation fulfilled finance minister nirmala sitharaman

Best of Express