scorecardresearch

19 மெட்ரோக்கள் டெல்லியில் மூடப்பட்டது! ஸ்தம்பித்து நிற்கும் தலைநகரம்

போக்குவரத்து நெரிசல் காரணமாக 16 விமானங்கள் தாமதமாக கிளம்பியது. இண்டிகோவின் 19 விமானங்கள் இன்று பல்வேறு காராணங்களால் சேவை நிறுத்தப்பட்டது.

CAA protests disrupt Delhi traffic 19 metro stations shutting down
CAA protests disrupt Delhi traffic 19 metro stations shutting down

CAA protests disrupt Delhi traffic 19 metro stations shutting down : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியின் செங்கோட்டை மற்றும் மண்டி ஹவுஸ் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுவதை ஒட்டி இது வரை 19 மெட்ரோக்கள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் காலை 9 மணியில் இருந்து பகல் 1 மணி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : இந்தியாவில் இதுவரை எத்தனை முறை இணைய சேவைகள் முடக்கப்பட்டது தெரியுமா?

மந்தி ஹவுஸ், சீலம்பூர், ஜஃப்பர்பாத், முஸ்தஃபாபாத், ஜாமியா நகர், ஷாயின் பாக், மற்றும் பவனா ஏரியாக்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் லால் குய்லா, ஜாமா மஸ்ஜித், சாந்தினி சோக், விஷ்வாவித்யாலா நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய செயலகத்தின் முன் மற்றும் பின் வாசல்கள் மூடப்பட்டது. ஆனால் இங்கு இண்டெர்சேஞ்ச் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

ராஜீவ் சோக், படேல் சோக், லோக் கல்யான் மார்க், உத்யோக் பவான், ப்ரகதி மைதான், ஜன்பாத், கான் மார்க்கெட் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மெட்ரோ நிலையங்கள் இன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்த் விகார் மற்றும் மண்டி ஹவுஸிலும் மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை -8ல் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 16 விமானங்கள் தாமதமாக கிளம்பியது. இண்டிகோவின் 19 விமானங்கள் இன்று பல்வேறு காராணங்களால் சேவை நிறுத்தப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Caa protests disrupt delhi traffic 19 metro stations shutting

Best of Express