Advertisment

அயோத்தி ராமர் கோவில் முஸ்லீம்களின் கல்லறைகள் மீதா கட்டப்படும்? அறக்கட்டளைக்கு கடிதம்!

1855ம் ஆண்டு கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் 75 நபர்களின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளது - ராம்லல்லாவின் தரப்பு மனுவில் இடம் பெற்றிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
new Ram temple be built on Muslim graves

new Ram temple be built on Muslim graves

 Seema Chishti

Advertisment

New Ram temple be built on Muslim graves : அயோத்தியில் வசிக்கும் 9 இஸ்லாமிய குடும்பங்கள், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளைக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர். புதிதாக கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலினை, பாபர் மசூதிக்கு அருகே இருந்த கல்லறையோடு சேர்த்து கட்டி விட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. 1480 சதுர மீட்டர் அளவில் மிக பிரம்மாண்டமாய் ஒரு காலத்தில் நின்ற பாபர் மசூதிக்கு அருகே கல்லறை தோட்டம் ஒன்று இருக்கிறது. சமீபத்தில் வெளியான தீர்ப்பில் 63 ஏக்கர் நிலப்பரப்பில் இஸ்லாமியர்கள் எந்தவித உரிமையும் கூற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்ட மசூதிக்கு அருகே 4 முதல் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மசூதி ஒன்று இருக்கிறது. அதுவும் மத்திய அரசு எதிர்பார்த்தபடி தன்னிச்சையாக இந்த நிலத்துடன் இணைக்கப்பட்டது. 1949ம் ஆண்டு ராமர் சிலையை வேண்டுமென்றே உள்ளே கொண்டு வந்து வைக்கப்பட்ட பின்பும், 1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்ப்பட்ட பின்பும் அந்த கல்லறைகள், இன்றைய சூழ்நிலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்படலாம்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

பாபர் மசூதிக்கு மாற்றாக, மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தினை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் மாதம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து பாபர் மசூதிக்கு வெகு தொலைவில் புதிய மசூதி கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  நான்கு பக்கங்களில், 10 அறக்கட்டளைகளுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், இந்து சனாதான முறையில் இருக்கும் அனுபவத்தையும், அறிவையும் கொண்டு, ”ராமர் கோவில் இஸ்லாமியர்களின் கல்லறையின் மேல் தான் கட்டி எழுப்பப்படுமா” என்பதை கொஞ்சம் யோசனை செய்யுங்கள். 1994ம் ஆண்டு மசூதி மற்றும் அதனை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தினையும் மத்திய அரசு கையகப்படுத்தியதை ஏற்றுக் கொண்டது உச்ச நீதிமன்றம். இந்த பகுதிகளில் தான் இஸ்லாமியர்களின் இடுகாடும் உள்ளது. பொதுமக்களின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இந்த நிலப்பகுதி உள்ளது என்று கூறி 1993ம் ஆண்டு மத்திய அரசு இந்த நிலத்தினை கையகப்படுத்தியது.

மேலும் படிக்க : பாபர் மசூதி விவகாரம் : புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை அறிவித்தது உ.பி. அரசு!

நிலத்தை கையகப்படுத்தினாலும் அங்கே இருக்கும் இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டும் என்று அதில் கூறப்படவில்லை என்பதையும் மேற்கோள் காட்டியுள்ளனர். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலத்தில் கல்லறைகள் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் “ஸ்ரீ ராம்லல்லா விரஜ்மானின் அசல் வழக்கு எண் 3-ல் 1855ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் 75 நபர்களின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டியுள்ளது. அலகாபாத் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தின் மூன்று பக்கங்களும் கல்லறையால் மூடப்பட்டுள்ளது என்று நீதிபதி டி.வி. ஷர்மா கூறியதையும் மேற்கோள் காட்டியுள்ளது அந்த கடிதம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ayodhya Temple Ram Temple Babri Masjid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment