scorecardresearch

கடன் மோசடி வழக்கு; வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் கைது

கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபல் தூத்தை கைது; ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சாந்தா கோச்சர் மற்றும் அவரது கணவரை வெள்ளிக்கிழமை கைது செய்த சி.பி.ஐ

கடன் மோசடி வழக்கு; வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் கைது

வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கிய கடன் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக மும்பையைச் சேர்ந்தவரும் வீடியோகான் குழுமத்தின் தலைவருமான வேணுகோபால் தூத்தை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) திங்கள்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 2012 வரை வங்கியில் ரூ.1,730 கோடி மோசடி செய்ததாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் எம்.டி மற்றும் சி.இ.ஓ சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை வெள்ளிக்கிழமை சி.பி.ஐ கைது செய்தது.

2012 ஆம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனம் ரூ.3,250 கோடி கடனாகப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, தீபக் கோச்சார் மற்றும் இரண்டு உறவினர்களுடன் இணைந்து நிறுவிய நிறுவனத்திற்கு வேணுகோபால் தூத் பல கோடி ரூபாய் வழங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் மார்ச் 29, 2018 அன்று செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக வங்கியும் சாந்தா கோச்சரும் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி.. டெல்லி எய்ம்ஸில் பரபரப்பு

2019 ஆம் ஆண்டில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ரூ 1,730 கோடி மோசடி செய்ததாக சாந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் மற்றும் நுபவர் ரினிவபிள்ஸ் (Nupower Renewables) மற்றும் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (VIEL) மற்றும் அறியப்படாத பொது ஊழியர்களும் குற்றம் சாட்டப்பட்டதாக சி.பி.ஐ தனது எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது. “குற்றம் சாட்டப்பட்டவர் (சாந்தா கோச்சார்) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை ஏமாற்ற மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கிரிமினல் சதியில் ஈடுபட்டு சில தனியார் நிறுவனங்களுக்கு சில கடன்களை அனுமதித்தார்” என்று எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ தலைமையிலான 20 வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து வீடியோகான் குழுமம் பெற்ற ரூ.40,000 கோடி கடனின் ஒரு பகுதியே இந்தத் தொகை என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது. ரூ.3,250 கோடி கடனில் கிட்டத்தட்ட 86 சதவீதம் (ரூ. 2,810 கோடி) செலுத்தப்படாமல் இருந்தது. வீடியோகான் கணக்கு 2017 இல் செயல்படாத சொத்தாக (NPA) (வராக்கடனாக) அறிவிக்கப்பட்டது.

சி.பி.ஐ.,யின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 26, 2009 அன்று, சாந்தா கோச்சார் அடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் அனுமதிக் குழு, “விதிகளுக்கும் கொள்கைகளுக்கும் முரணாக” வீடியோகான் நிறுவனத்திற்கு (VIEL) ரூ. 300 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்தது, என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சி.பி.ஐ.,யால் குற்றஞ்சாட்டப்பட்ட சாந்தா கோச்சார் செப்டம்பர் 7, 2008 அன்று இந்த கடனை வழங்குவதற்காக தனது அதிகாரபூர்வ பதவியை “நேர்மையற்ற முறையில்” துஷ்பிரயோகம் செய்தார், அடுத்த நாளே, அவரது கணவரின் நிறுவனமான Nupower Renewables தனது முதல் மின் உற்பத்தி நிறுவனத்தை தொடங்க ரூ.64 கோடியை வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (VIL) நிறுவனத்திடம் இருந்து பெற்றது. “… M/s VIELக்கு ரூ. 300 கோடி RTL (ரூபாய் டேர்ம் லோன்) அனுமதித்ததற்காக சாந்தா கோச்சார் தனது கணவர் மூலம் வேணுகோபால் தூத்திடம் இருந்து சட்டவிரோதமான திருப்தி / தேவையற்ற பலன்களைப் பெற்றார்,” என்று சி.பி.ஐ தனது எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது.

ஜூன் 2009 மற்றும் அக்டோபர் 2011 க்கு இடையில் வீடியோகான் குழுமத்தின் ஐந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட RTL கள் “வங்கியின் கடன் கொள்கையை மீறியவை” என்று சி.பி.ஐ கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Cbi arrest venugopal dhoot videocon icici bank cheating case