சிபிஐ விவகாரம் மல்லிகார்ஜுன கார்கே புதிய மனு : சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரையும் நேரில் வந்து பதிலளிக்கச் சொல்லி பிரதமரிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு இருவரையும் அவர்களின் பணியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. இயக்குநரின் பொறுப்புகளை ஒடிசாவைச் சேர்ந்த நாகேஷ்வர ராவ் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : தனியார் நிறுவனத்திற்கு 1.14 கோடி கடன் கொடுத்த நாகேஷ்வர ராவ் மனைவி
சிபிஐ விவகாரம் மல்லிகார்ஜுன கார்கே மனுத் தாக்கல்
இந்நிலையில் சிபிஐ தலைமை இயக்குநர்களை நியமிக்கும் மூவர் கமிட்டியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றத்திற்கு மனு ஒன்றினை அளித்திருக்கிறார்.
அதில், அலோக் வர்மாவினை பதவியில் இருந்து நீக்கியது சட்ட விரோதமானது என்றும், டெல்லி சிறப்பு காவல் நிறுவகச் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது என்றும் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிபிஐ இயக்குநரை பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தாலும் கூட பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர்கள் அடங்கிய நியமனக் குழுவின் ஒப்புதலுடன் தான் நீக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கட்டாய விடுப்பில் என்னால் செல்ல இயலாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் அலோக் வர்மா. எதனால் அவரை பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என 10 நாட்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமென சிவிசி (மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு) உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
அலோக் வர்மாவின் பதவிப் பறிப்பினை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தை தலைமையேற்று நடத்தி சிறை சென்றார் ராகுல் காந்தி. அது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க