சிபிஐ அதிகாரி நாகேஷ்வர ராவ் : சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய பொறுப்புகள் அனைத்தையும் ஒடிசாவைச் சேர்ந்த நாகேஷ்வர ராவ் ஏற்றுக் கொள்வார் என்று உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் கட்டாய விடுப்பினை ஏற்க இயலாது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தார் அலோக் வர்மா. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
நாகேஷ்வர ராவ், அலோக் வர்மாவின் வழக்கு விசாரணை முடியும் வரை எந்த விதமான முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. இவரின் நியமனத்திற்கு தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கிறது.
சிபிஐ அதிகாரி நாகேஷ்வர ராவ் மனைவி கொடுத்த கடன்
கொல்கத்தாவைச் சேர்ந்த ஏஞ்சலா மெர்கண்டைல்ஸ் பிரைவேட் லிமிட்டட் (Angela Mercantiles Private Ltd (AMPL) ) நிறுவனத்திற்கும், நாகேஷ்வர ராவின் மனைவி எம். சந்தியாவிற்கும் இடையில் 2011ம் ஆண்டு தொடங்கி 2014ம் ஆண்டு வரை வர்த்தக ரீதியிலான தொடர்புகள் இருந்து வந்ததை சுட்டிக்காட்டியிருக்கிறது ரெஜிஸ்தரார் ஆஃப் கம்பனீஸ்.
இந்த ஏ.எம்.பி.எல் நிறுவனத்திடம் இருந்து 2011ம் நிதியாண்டின் முடிவில் 25 லட்சம் ரூபாய் கடனாய் வாங்கியுள்ளார். அதே தரவுகளில் 2012 மற்றும் 2014ம் ஆண்டு வரை 1.14 கோடி ரூபாயை மூன்று தவணைகளாக அந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.
2012ம் ஆண்டில் ரூபாய் 35.56 லட்சம், 2013ம் ஆண்டில் ரூபாய் 38.27 லட்சம் மற்றும் 2014ம் ஆண்டில் 40.29 ரூபாயை அந்நிறுவனத்திற்கு கடனாய் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏ.எம்.பி.எல். நிறுவனத்தின் இயக்குநர் ப்ரவீன் அகர்வாலிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, ராவ் எனக்கு நெருங்கிய நண்பர். சந்தியா எங்களின் குடும்ப நண்பர்களில் மிகவும் முக்கியமானவர். நண்பர்களிடம் கடன் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினார். சிபிஐ செய்தித் தொடர்பாளரிடம் இது குறித்து கேள்வி கேட்ட போது, பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
சர்ச்சையில் சிக்கும் நிறுவனம்
ரெஜிஸ்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட முகவரியில் இருக்கும் கட்டிடம்
ரெஜிஸ்தரர் அலுவலகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஏ.எம்.பி.எல் நிறுவனத்தின் முகவரிக்கு நேரில் சென்று பார்த்த போது, அங்கே நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை என்றும், குடும்பங்கள் வாழ்வதற்கான வீடு மட்டுமே உள்ளது என்றும் அங்கே வீட்டினை பாதுகாத்து வரும் பாதுகாவலர் கூறினார். மேலும் அகர்வாலின் குடும்பம் அங்கே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.