அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள் – ஒரு பார்வை

ரஃபேல் விமான ஊழல், மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு என நீளுகிறது பட்டியல்

By: Updated: October 25, 2018, 10:29:55 AM

அலோக் வர்மா விசாரணை செய்த வழக்குகள் : சிபிஐ அதிகாரிகள் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் தங்களுக்குள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நிலையில் இருவரையும் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டடது. இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதோடு அவரின் பணிகளை நாகேஷ்வர ராவ் தொடருவார் என்றும் கூறியிருந்தது.

அலோக் வர்மா விசாரணை செய்த வழக்குகள்

பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முன்பு வரை அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை.  ரஃபேல் விமான ஊழலில் தொடங்கி, மருத்துவ கவுன்சிலிங்கில் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு என இந்தியாவில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளின் விசாரணைகளை அவர் மேற்கொண்டு வந்தார். To read this article in English

ரஃபேல் போர் விமான ஊழல்

முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி மற்றும் வழக்கறிஞர் ப்ரசாந்த் பூஷன் ஆகியோர் ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக அக்டோபர் 4ம் தேதி 132 பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றினை பெற்றுக் கொண்டார் அலோக் வர்மா.

இந்திய மருத்துவ கவுன்சில் ஊழல்

மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குதூஸியிடம் இந்திய மருத்துவக் கவுன்சில் ஊழல் வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கக் கோரி லஞ்ச பேரம் நடத்தியது தொடர்பான வழக்கினை விசாரித்து வந்தார் அலோக் வர்மா.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல்

தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருந்த போது, அக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என். சுக்லா மீது வழக்கு தொடரப்பட்டது. அது தொடர்பான வழக்கு கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. அலோக் வர்மாவின் கையெழுத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் வழக்கு அது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதிச் செயலாளர் ஹஸ்முக் அதியா வழக்கு

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, நிதி மற்றும் வருவாய்த் துறை செயலாளராக பணியாற்றும் ஹஸ்முக் அதியா மீது கொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையையும் அலொக் வர்மா மேற்பார்வையிட்டு வருகிறார்.

பிரதமர் செயலர் பாஸ்கர் குல்பே

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் செயலர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான பாஸ்கர் குல்பே மீதான வழக்கு ஒன்றினை விசாரித்து வருகிறார் அலோக் வர்மா.

லஞ்ச வழக்கு

பப்ளிக் செக்டார் யூனிட் அப்பாய்ண்ட்மெண்ட்டுகளிற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வைக்கப்பட்ட 3 கோடி ரூபாயினை டெல்லியில் கண்டுபிடித்தனர் சிபிஐ அதிகாரிகள். அவர் மீதான வழக்கினையும் விசாரணை செய்து வருகிறார் அலோக் வர்மா.

ஸ்டெர்லிங் பயோடெக் நிதி மோசடி வழக்கு

குஜராத்தை சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நடத்திய தொழிலதிபர் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா பொதுத்துறை வங்கிகளில் இருந்து 5300 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு, இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார். இது தொடர்பான வழக்கினையும் விசாரணை செய்து வந்தார் அலோக் வர்மா. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Cbi power shift seven key files on alok vermas table when he was asked to go

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X