CBSE Board 12th Class Result : இந்த வருடம் நடைபெற இருக்கும் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து, சிபிஎஸ்இ செக்ரட்டரி அனுராக் திருப்பதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.கடந்த ஆண்டு வினாத்தாள்கள் வெளியானதால், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கு அதிக அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
வினாத்தாள் பாதுகாப்பு, தேர்வுத் தாள்கள் திருத்தும் முறைகள், 15 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வுகளை நடத்த ஏற்பாடு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்தல் குறித்த கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
CBSE Board 12th Class Result - 15 நாட்களுக்கு முன்பே தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது ஏன் ?
இந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்த தேர்வுகள் 45 நாட்களுக்கு நடத்தப்படும். சுமார் 200க்கும் மேற்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் சரியான நேரங்களுக்கு விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் வெளியீடு, மறு திருத்தல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் போன்ற மிக அழுத்தம் தரக்கூடிய வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
இதில் இருந்து கொஞ்சம் விடுதலையாகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இடையூறு இல்லாத வகையிலும் இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும். எனவே தான் இந்த முடிவினை எடுத்துள்ளோம் என கூறியுள்ளார் அனுராக் திருப்பதி.
மேலும் படிக்க : சி.பி.எஸ்.இ தேர்வுகள் புதிய வழிமுறைகள்
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு முன்பே மறுகூட்டல் போன்றவற்றை முடித்துவிட்டால் மாணவர்கள் அந்த பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.